மயிலாடுதுறை நகர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 4 மதுபானக்கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக அனுமதி இன்றி பார் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் இரவு வேலை நேரம் முடிந்தபின் பூட்டப்பட்டாலும், அதன் அருகில் செயல்படும் பார்களில் விடிய விடிய இரவு முழுவதும் மது விற்பனை காலை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. 




Google Play Store: காலாவதியான செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதிக்கு நவ.1ல் இருந்து தடை


இந்நிலையில், மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு வடக்குத்தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் 23 வயதான மகன் ஜீவானந்தம் என்ற இளைஞர், தங்கள் பகுதியில் நடைபெறும் கோயில் விழாவுக்காக மொத்தமாக மது வாங்க, பழைய பேருந்து நிலையம் அருகில் பஜனை மடம் சந்தில் செயல்பட்டு வரும்  டாஸ்மாக் கடைக்கு நேற்று நள்ளிரவு சென்றுள்ளார். அப்போது, அந்த பாரில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த தமிழ்மணி என்பவர் அதிக விலைக்கு மது விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மொத்தமாக வாங்குவதால் விலை குறைத்துத் தருமாறு ஜீவானந்தம் கேட்டுள்ளார். 




இதற்கு தமிழ்மணி மறுப்புத் தெரிவித்ததால் வாக்குவதாதத்தில் ஈடுபட்ட ஜீவானந்தம் திரும்பச் சென்று தங்கள் பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்களை உடன் அழைத்து வந்து தமிழ்மணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜீவானந்தத்தின் நெஞ்சில் குத்தியதில் ஜீவானந்தம் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை நண்பர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் பரிதாபமாக உயிரழந்தார். 


 




Beast vs KGF 2: பீஸ்ட் VS கேஜிஎஃப் 2: யாருக்கு எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


இதனை அடுத்து, தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை காவல்துறையினர் ஜீவானந்தத்தின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, தமிழ்மணியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகும், அரசு அனுமதி பெறாமல் பல மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாகவும் இதனை பல முறை புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்றும் இதுபோன்று அனுமதி இல்லாத மதுபான பார்களால்தான் இதுபோன்ற குற்ற சம்பவம் நடந்தேறி வருவதாகவும் உடனடியாக இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் கருத்து தெரிவித்தனர்.