காலாவதியான செயலிகளை டவுன்லோட் செய்யும் வசதியை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தடை செய்வதாக கூகுள் ப்ளே ஸ்டோர் அறிவித்துள்ளது.
Google Play Store என்பது நாம் நமக்கு விருப்பமான கேம்ஸ்களையும், அப்ளிகேஷன்களையும், பாடல்களையும், திரைப்படங்களையும் வாடகைக்கும், மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை பார்க்க பல விதமான செயலிகளைக் கொண்டது. அதில் உள்ள செயலிகளை டவுன்லோட் (Apps Download) செய்து நம்மால் காணவோ, கேட்கவோ, விளையாடவோ இயலும்.
கூகுள் தனது ஆண்ட்ராய்டு அங்காடியையும், இசைச் சேவையையும் இணைத்து கூகுள்பிளேவை ஆரம்பித்தது.
இந்த, Google Play Store என்பது நாம் பயன்படுத்து ஆண்ட்ராய்ட் மொபைல் வெர்ஷனுக்கு ஏற்ற வகையில் மொபைலில் அமைந்திருக்கும். அதுபோலவே, அதன் அப்ளிகேஷன்களும் மாறி நமக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.
எப்படி டவுன்லோட் செய்வது..
கூகுள் பிளே ஸ்டோர் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட இருக்கும். ஒரு ஒருவேளை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இருந்தால் அதில் கூகுள் பிளே ஸ்டோர் அப்ளிகேஷன் இருக்காது . நாம் அதை தனியாகத்தான் இன்ஸ்டால் செய்ய வேண்டும். உங்கள் பிரவுசரில் சென்று டவுன்லோட் செய்து அதை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
நவம்பர் 1ல் வருகிறது தடை..
இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் அன்றாடம் பலவிதமான செயலிகள் அப்டேட் ஆகின்றன. அதனால் பழைய செயலிழந்த செயலிகளை மக்கள் தரவிறக்கம் செய்யாத வண்ணம் தடை செய்யப்போவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 1 ஆம் தேதி நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.
இனி கூகுள் ப்ளே ஸ்டோரை டவுன்லோட் செய்யும் புதிய பயனர்கள் பழைய ஆப்களை டவுன்லோட் செய்ய இயலாது. அதேபோல், கூகுள் ப்ளேஸின் லேட்டஸ்ட் கொள்கைக்கு இணங்க, பயனர்கள் குறைந்த ப்ரைவசி பாலிசி, பாதுகாப்பு அம்ச குறைபாடு கொண்ட செயலியை தரவிறக்கம் செய்ய இயலாத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதேபோல் செய்தி சார்ந்த செயலிகளும், அவற்றின் அப்டேட்டட் வெர்ஷன்களும் கூட இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற பல்வேறு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு செயலியுமே கடுமையான விதிமுறைகளைத் தாக்குப்பிடித்தே இடம்பெற்றிருக்கின்றன என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் எதை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலையில் அதனை உலகம் முழுவதும் செல்போன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த தடையால் பல்வேறு சிக்கல்களும் தீரும் எனக் கூறுகிறது கூகுள் நிறுவனம்.