மயிலாடுதுறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் க.பாலு. இவர் நகர்ப் பகுதிகளில் நடைபெறும் பாதாள சாக்கடை சீரமைப்பு மற்றும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிட்டி இருந்தார். அதன்படி நகராட்சி ஆணையர் பாலு காலை வாகனங்களை தவிர்த்து சைக்கிளில் சென்று பணிகளை பார்வையிட்டார்.
நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஆணையர் பாலு, முதலில் கண்ணாரத் தெரு முக்கூட்டு பகுதியில் நடைபெற்று வந்த பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் பாதுகாப்பாகவும், துரிதமாகவும் பணியை முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு கூறைநாடு கிட்டப்பா மேல்நிலைப் பள்ளிக்கு அருகே கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4 ஏக்கர் நிலப்பரப்பில் மினி ஸ்டேடியம் அமைய உள்ள இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பள்ளி தலைமையாசிரியர் அன்புச்செழியனையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் சணல்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். பெட்ரோல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து வரும் நிலையில் பொருளாதார சிக்கனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சைக்கிள் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் சைக்கிளில் சென்று பணிகளை பார்வையிட்டது. பொதுமக்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டுவதன் மீது உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும் விதத்தில் அமைந்தது.
இந்தியாவில் இப்படியெல்லாம் அந்நிய சக்திகள் தலையிட முடியாது” - உடைந்து அழுத பாகிஸ்தான் பிரதமர்
மேலும் ஒரு சில பொதுமக்கள் நகராட்சி ஆணையருக்கே பெட்ரோல், டீசல் உயர்வு பாதிப்பு என்றால், ஏழை எளிய அன்றாட கூலிவேலை செய்யும் எங்களைப் போன்றவர்களின் நிலை என்ன என அவர்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டு சென்றனர். நீண்ட நெடு தூரம் செல்பவர்களுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும், பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிவாயு விலையை உடனடியாக அரசு கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் காய்கறி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களின் வாடகை உயர்ந்து சாமானிய மனிதன் மிகுந்த இன்னலுக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.