மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமத்தில் அரசங்குளம் உள்ளது. தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த சந்திரஹாசன், அவரது மகன் சங்கர் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்து வருகின்றனர்.
Group 4 Exam Date: ஜுலை 24-ஆம் தேதி குருப்-4 தேர்வு.. எப்படி விண்ணப்பிக்கவேண்டும்? என்ன மாற்றங்கள்?
இந்நிலையில் 28-ஆம் தேதி நேற்று காலை முதல் குளத்தில் மீன்கள் மற்றும் இறால்கள் இறந்து கரை ஒதுங்க தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுயுள்ளது இதனை அடுத்து, அப்பகுதி மக்கள் குத்தகைதாரர்களுக்கு தவகல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த குத்தகைதாரர் இதுவரை இறந்து கரை ஒதுங்கிய பல்லாயிரக்கணக்கான மீன்களை அப்பறப்படுத்தி புதைத்துள்ளார்.
பின்னர் தண்ணீர் கெட்டுவிட்டதா என்று ஆய்வு மேற்கொண்டதில் தண்ணீர் கெடுவதில்லை எனவும், குளத்தில் தண்ணீர் அருந்திய நாய் மற்றும் மீன்களை தின்ற பாம்பு, தவளைகள் இறந்துள்ளதால் குளத்தில் மர்ம நபர்கள் விஷம் கலந்துள்ளனர் என்று தெரிவித்த குத்தகைதாரர், இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அடேங்கப்பா இந்த காலத்துல இப்படி ஒரு அதிகாரியா...! - தனது 5 வயது மகனை அரசு பள்ளியில் சேர்ந்த எஸ்.பி
தொடர்ந்து இன்றும் ஏராளமான மீன்கள் மற்றும் இறால்கள் இறந்து கரை ஒதுங்கி வருகிறது. குளத்தில் விஷம் கலந்துள்ளதை உறுதிபடுத்த குளத்தில் இருந்து தண்ணீரையும், இறந்த மீன்களையும் தஞ்சாவூரில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில் முனைவு மற்றும் மேலாண்மை துறைக்கு ஆய்வுக்கு எடுத்துசெல்ல உள்ளதாகவும், குளத்தில் விஷம் கலந்தவர்களை கண்டறிந்து பெரம்பூர் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் குளத்தில் மீன்கள் இறந்தது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து குளத்தில் யாரேனும் விஷம் கலந்தார்களா எனவும், பொதுவாக பல இடங்களில் குளத்தில் மீன்களை ஏலம் எடுப்பதும், அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமாக சில குளத்தின் தண்ணீரில் விஷம் கலந்து மீன்கள் இறப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது எனவும், தற்போது அந்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக பெரம்பூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.