மயிலாடுதுறை சேந்தங்குடி வள்ளலார் கோயில் ஒத்த தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் என்பவரின் 57 வயதான மனைவி கௌரி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மதியம் 3.30 மணியளவில் வள்ளலார் கோயில் அருகில் உள்ள பூக்கடை ஒன்றில் பூஜைக்காக மாலை வாங்கிக்கொண்டு இரட்டைத்தெருவில் சாலையோரமாக நடந்து சென்றுள்ளார். 



அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில்  வந்த 2 மர்ம நபர்களில்  ஒருவர் திடீரென கௌரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பட்ட பகலில் எதிரே சென்று பறித்துள்ளார். கௌரி செயினை காப்பாற்றிக்கொள்ள போராடிய நிலையில் தாலி செயினை அறுத்து கௌரியை கீழே தள்ளி விட்டு மர்ம நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். கௌரியின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்துள்ளனர். இதனை அடுத்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 




மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை காவல் துறையினர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பு காட்சிகளை கொண்டு 2 மர்ம நபர்களை  காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை தேடி வந்தனர். குற்றவாளிகள் அரியலூர் மாவட்ட மீன்சுருட்டி காவலர்களிடம் சிக்கியதை அடுத்து அவர்களை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.


TNPSC New Update : தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு




இதனிடையே மூதாட்டியிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மயிலாடுதுறை மக்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரையும், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் மீன்சுருட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.




விசாரணையில், அவர்கள் இருவரும் ஆண்டிமடத்தை சேர்ந்த பாலசுப்பரமணியன் மற்றும் மணிகண்டன் என்பதும், அவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மீன்சுருட்டி பகுதியில்  இருசக்கர வாகனத்தை திருடி மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குற்றவாளிகளின் இருந்து மூதாட்டி கெளரியிடம் பறித்து சென்ற  5 சவரன் செயின் மீட்கப்பட்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.


பாலக்கோடு அருகே வெறி நாய்கள் கடித்து காயமடைந்த 2 சிறுமிகள் உட்பட 8 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை