இந்த வருடம் குறுவை சாகுபடிக்கு அரசு காப்பீட்டு பிரீமியம் செலுத்த அனுமதி வழங்கவில்லை. இருந்த போதிலும் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அரசே அரசு நிதியில் இருந்து நஷ்ட ஈடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. ஆகையால் உடனடியாக இந்த குறுவை சாகுபடியில் பெய்த மழையால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கெடுத்து அரசு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு ஏற்ப இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குறுவையில் மழை பெய்த காரணத்தால் வயல்களில் சேதமடைந்தும், அதைவிட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் அதிக அளவில் முளைத்து சேதமாகி உள்ளது. எப்போதும் இந்த மழை காலங்களில் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் அரசு உரிய நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் தேக்கமடைந்து விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நெல்கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், அதிக மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆகையால் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைய விடாமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் இந்த வருமானத்தை நம்பி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதால் அதற்குள் அனைத்து நெல் மணிகளையும் எந்த நிபந்தனையும் இன்றி தடையின்றி கொள்முதல் செய்ய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் அரசு அதிகாரிகள் மேலும் உறுதிப்படுத்தி உடனுக்குடன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய குழு அதிகாரிகள் திருவாரூரில் ஆய்வு
நடப்பு சம்பா தாளடி சாகுபடி பயிர்களுக்கு தேவையான உரங்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உரங்கள் உற்பத்தி குறைவாக இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு முன்னேற்பாடாக, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு தேவையான உரங்கள் கையிருப்பு வைத்திருக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில், சம்பா தாளடி சாகுபடியில், அதிக மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. உரங்கள் தட்டுப்பாடு இருப்பதால் சில தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறது. மேலும் தேவையில்லாத உரங்களை வாங்கச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிக அளவில் உரங்கள் கொள்முதல் செய்து சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னோடி விவசாயி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் போராட்டம் - கல்விகடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை