தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கி இந்த மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 89 பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு கல்வி பயிலும் 5 ஆயிரத்து 42 மாணவர்களும் 5 ஆயிரத்து 353 மாணவிகள், 52 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 395 மாணவ, மாணவிகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
20 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை எனவும், இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை வீதம் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரமும், வேலைக்காக தேர்வு எழுத ஆசிரியர்கள் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்வு எழுதும் மையங்களில் மின்தடை ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாத வண்ணம் பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்படியா பா.ஜ.க.வின் குரலாக நீங்கள் மாறுவீர்கள்; வெட்கமாக இல்லையா ? - அதிமுகவை சாடிய வீரமணி
இந்நிலையில் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு இன்று தனது முதல் தேர்வை எழுதினார். மாணவி லட்சுமி பிறந்த போது இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்துள்ளார் மேலும் அவர் பெண் குழந்தை என்பதால் அவருடைய பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறை ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில் மாணவி லட்சுமி இரண்டு வயது குழந்தையாய் இருந்தபோது விட்டு சென்றுள்ளனர்.
5 வயது வரை அரசுப்பேருந்துகளில் கட்டணம் இல்லை - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேரவையில் அறிவிப்பு
அன்றில் இருந்து காப்பகத்தில் வளர்ந்த லட்சுமி தான் படித்து பெரிய அளவில் சாதித்து சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என ஆர்வத்துடன் படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னம்பிக்கையுடன் படித்து தனது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவி லட்சுமியை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
எம்.எல்.ஏ கேள்விக்கு நாசுக்காக பதிலளித்த அமைச்சர்! போட்டுக்கொடுத்த துரைமுருகன் - பேரவையில் கலகல..!