லாக்கப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நடிகை பாயல் ரொஹத்கி, தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்


பாலிவுட்டில் ஃபேஷன், வோ லம்ஹே, கேங்ஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் தொடங்கி இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் கங்கனா ரனாவத். இவர் தற்போது லாக்  அப் நிகழ்ச்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் போல விவகாரமான நிகழ்ச்சிதான் லாக் அப். 16 சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பல மாதங்களாக லாக்-அப்பில் வைக்கப்படுவார்கள். 


இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களான சர்ச்சைக்குரிய பிரபலங்களின் அனைத்து வசதிகளும் பறிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரபலங்கள் தங்களுடைய கடந்தகால நினைவுகளையும் பகிர்ந்துகொள்வார்கள். இதில் தன்னுடைய கதையைச் சொன்ன நடிகை பாயல் ரொஹத்கி, தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் தான் எந்த அளவுக்கு மதுவுக்கு அடிமையானதாக குறிப்பிட்டுள்ளார் நடிகை பாயல். 






நிகழ்ச்சியில் பேசிய பாயல், ''இதற்கு முன்னதாக நான் கலந்துகொண்ட ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். என்னை மிகவும் நெகட்டிவாகவும், மோசமாகவும் அவர்கள் சித்தரித்து காட்டினார்கள். அங்கு காதலும் ஒன்று அரங்கேறியது. அது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பெரிய அளவில் பாதித்தது. அந்த பிக்பாஸ்க்கு பிறகு நான் பிரபலமானேன். ஆனால் அது பாசிட்டிவ் வகையில் இல்லை, நெகட்டிவ் பப்லிசிட்டி. 






மன உளைச்சலில்  நான் அதிகமாக குடிக்கத் தொடங்கினேன். மதுவுக்கு அடிமையானேன். தொடர்ந்து 2 நாட்கள் கூட குடித்திருக்கிறேன். இரவா பகலா என்பதுக் கூட தெரியாமல் குடிப்பேன். சிகரெட் அடிப்பேன். கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன். இதெல்லாம் என் குடும்பத்தினருக்கு தெரியாது. எல்லாம் சரியாக வேண்டும். ஒரு நல்ல பையன் என் வாழ்க்கையில் கிடைக்க வேண்டுமென கடவுளை பிரார்த்திப்பேன்" என்றார்.