மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 11 -ஆம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களும், குடியிருப்புகளும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை கடந்த 14 -ம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
Vegetable Price: வெங்காயம், தக்காளி, கத்திரி விலை குறைவு..! அப்போ மற்ற காய்கறிகள் விலை..?
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளான தரங்கம்பாடி மற்றும் சீர்காழி தாலுக்காவிற்கு வெள்ள நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், விளை நிலங்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கான உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரண உதவித்தொகையினை வருகின்ற நவம்பர் 24ம் தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு உரிய அந்தந்த நியாய விலைக் கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.
TN Rain Alert: காற்றழுத்த தாழ்வு பகுதியின் தற்போதைய நிலை என்ன..? எப்போது கரையை கடக்கும்..?
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14ஆம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அன்றைய தினமே உடனடியாக சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை குடும்பத்திற்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள 145 நியாய விலைக் கடைகளில் 99,518 குடும்ப அட்டைதாரர்களும், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 94 நியாய விலைக் கடைகளில் 62,129 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு வட்டத்தில், 239 நியாய விலைக் கடைகளில் 1000 ரூபாய் நிவாரண உதவித்தொகை 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகின்ற 24.11.2022 அன்று முதல் வழங்கப்படும். எனவே குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரிவித்துள்ளார்.
Gold ,Silver Price Today: தங்கம் விலை தொடர் சரிவு..! இன்றைய விலை எவ்வளவு தெரியுமா..?