குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திர, வட தமிழ்நாடு கடற்கரைக்கு மற்றும் மேற்கு மத்திய அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. மேலும், அதனுடன் தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 4.5 கிமீ வரை பரவியுள்ளது.
மழை எச்சரிக்கை:
இதன் காரணமாக இன்று வட தமிழகம்-புதுச்சேரி, தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் இன்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, மன்னார் வளைகுடா மற்றும் வட இலங்கைக் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
23.11.2022 மற்றும் 24.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.11.2022 மற்றும் 26.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சில தினங்களுக்கு முன்பு, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. அதற்கு, நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து சுற்றி இருக்கும் காற்றை இழுக்கும் தன்மை இருக்கும். அதாவது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலுக்கு முந்தைய நிலையாகும். இந்நிலையில் வங்கதேசம் உள்ளிட்ட வட பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. இந்த ஈரப்பதத்தை, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஈர்ப்பதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. இதனால் வானிலை குளிர்ந்து காணப்படுகிறது.
கரையை கடப்பது எப்போது..?
காற்றழுத்தமானது, இன்று கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
செஞ்சி (விழுப்புரம்) 2, வளத்தி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), வல்லம் (விழுப்புரம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Chennai Snow: ஊட்டியாக மாறிய சென்னை..! திடீரென வீசும் கடும் குளிருக்கு காரணம் என்ன..?