மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் இந்த மாத தொடக்கத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. திமுக நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில்லை, சீர்காழி பகுதிகளில் குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை, சீர்காழி நகராட்சியின் கட்டுப்பாட்டில்  ஈசானிய தெருவில் இயங்கிவரும் தற்காலிக தகன மேடை பராமரிப்பு இன்றி காணப்படுகிறது, என பல்வேறு குற்றச்சாட்டை  அதிமுக, திமுக, பாமக, மதிமுக, தேமுதிக, சுயேச்சை உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நகலை கிழித்து எறிந்து  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




தொடர்ந்து இரவும் பாய், தலையணையுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையர் வாசுதேவன் இரு முறைக்கு மேல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எவ்வித உடன்பாடும் ஏற்படாததால், நகர்மன்ற உறுப்பினர்கள் இரவை கடந்து போராட்டத்தை  தொடர்ந்தனர். இரவு உணவை நகர்மன்ற கூடத்திலேயே உண்ட உறுப்பினர்கள் பின்னர் பாய், தலையணை கூடுதலாக எடுத்து வரப்பட்டு நகர்மன்ற கூட்டம் நடக்கும் இடத்திலேயே உறங்கினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில் சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.


Bajaj pulsar 220F: மீண்டும் வந்தது பல்சர் 220F.. பஜாஜ் நிறுவனம் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்




பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை எடுத்து வார்டு உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரில் பேசி பிரச்னைகளைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில்  இந்த போராட்டத்தை நகராட்சி பணிபுரியும் அலெக்ஸ்பாண்டியன் என்பவர் தனது செல்போனில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் கிண்டல் செய்து ‘காதல் மன்னன்’ படத்தில் வரும் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி பெண் கவுன்சிலர்களை கிண்டல் செய்யும் வகையில் தனது செல்போனில் பதிவிட்டுள்ளார்.


Bombay Jayashree: லண்டனில் சிகிச்சை..பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை அப்டேட்.. ரசிகர்களுக்கு குடும்பத்தினர் வேண்டுகோள்






இதனை கண்ட சீர்காழி நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் நகராட்சி ஊழியரை கண்டித்து போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்ட முடிவை கைவிட கோரி சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் பெண் வார்டு உறுப்பினர்களை கிண்டல் செய்த அலெக்ஸ் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி ஆணையர் வாசுதேவனிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று உடனடியாக நகராட்சி ஆணையர் ஒரு வாரம் அலெக்ஸ் பாண்டியனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Vegetable Price: விலை உயர்ந்த சின்ன வெங்காயம்.. மற்ற காய்கறி விலையில் மாற்றமா? இன்றைய விலை பட்டியல் இதோ..









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண