மயிலாடுதுறை மாவட்டம் சோழம்பேட்டை மாரியம்மன் கோயில் அருகே இருந்த 2 குட்டைகளில் கடந்த 6 ஆம் தேதி 50க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் தண்ணீரில் கிடந்தது இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் மயிலாடுதுறை வட்டவழங்க அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு தண்ணீரில் சரியாக மூழ்காமல் இருந்த 12 மூட்டை அரிசிகளை கைப்பற்றி ரேஷன் அரிசியா என்பதை ஆய்வு செய்வதற்காக நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்பினார்.


கால்நடைகளுக்கு நோய் பரவுதலை தடுக்க கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு




இதில் மேலும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக மீண்டும் இன்று நூறுநாள் திட்ட வேலை செய்வதற்காக சென்ற கிராம மக்கள் சோழம்பேட்டை தாமரைகுளத்தின் கரையில் செடிகள் காடாக மண்டிகிடக்கின்ற இடத்தில் அரிசிகள் கொட்டி புழுக்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக தகவல் அளித்த பொதுமக்கள் நீர்நிலைகளில் ரேஷன் அரிசியை கொட்டி சென்றவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று என கேட்டுக்கொண்டனர். மேலும் இம்முறை தாமரைகுளத்தில் கொட்டிகிடந்த அரிசிகளில் சாக்குகள் எதுவும் இல்லாமல் வெறும் அரிசிமட்டுமே கிடந்ததாகவும், சாக்குகளை அப்பகுதி மக்களே சிலர் வீட்டு பயன்பாட்டிற்கு எடுத்து சென்றதாகவும், அப்போதுதான் அரிசி கொட்டிகிடப்பது தெரியவந்தது என்று கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.


Hindi Words in Pongal Gift: பொங்கல் தொகுப்பில் இந்தியை திணிக்கிறதா திமுக..? - அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பும் ஓபிஎஸ்..!




இதேபோன்று சீர்காழியை அடுத்த செம்மங்குடி கிராமத்தில் நியாயவிலை கடை எதிரில் உள்ள குளத்திலும் ரேஷன் அரிசியில் குளத்தில் கொட்டப்பட்டு இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதுகுறித்தும் சீர்காழி வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



இந்நிலையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரேசன் அரிசி மாவட்டத்தில் மூன்றாவது முறையாக குளத்தில் கொட்டப்பட்டு இருப்பது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உணவுப் பொருட்களை இவ்வாறு வீணடிக்கும் நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.


பொங்கல் திருநாளையொட்டி வண்ண கோலப் பொடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்


ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்