கொரோனோ வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 2 டோஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு ஒன்பது மாதம் கடந்தவர்களுக்கு போஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளனர்.
Delhi Lockdown: டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்; வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு..!
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசியான பூஸ்டர்டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று தொடங்கி வைத்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் அனைவரும் தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் விதமாக முதல் பூஸ்டர்டோஸ் தடுப்பூசியை மாவட்ட ஆட்சியர் லலிதா செலுத்திக்கொண்டார்.
விவேகானந்தர் பிறந்தநாள் அன்று டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவோம் - இந்து மக்கள் கட்சி எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், முன்களப்பணியாளர்களுக்கு 3 வது தவணையான பூஸ்டர்டோஸ் தடுப்பூசி போடும் பணி மயிலாடுதுறையில் துவங்கப்பட்டுள்ளது. வருவாய், சுகாதாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சேர்த்து 2500 முன்களப் பணியாளர்கள் மாவட்டத்தில் பணியில் உள்ளனர். அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தீவிரமாக பரவிவருகிறது. நேற்று ஒரேநாளில் 20 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 84 ஆக உள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசினர் மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்து ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிட் கேர் சென்டர்கள் மயிலாடுதுறை மாயூரா ஹால், வைத்தீஸ்வரன்கோயில் அரசினர் மருத்துவமனை, தரங்கம்பாடி அரசினர் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.
மக்கள் புரளிகளை நம்பாமல் தானாக முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் நேரடியாக அரசினர் மருத்துவமனைக்கு செல்லாமல் அருகில் உள்ள ஸ்கிரீனிங் சென்டர்களில் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மகேந்திரன், துணை இயக்குநர் பிரதாப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.