மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம், செம்பனார்கோவில் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 5 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம வளர்ச்சி பணிகள், பசுமை வீடு திட்டம், அரசு சிமெண்ட், பல்வேறு கட்டிட பணிகள் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவர்கள் அனைவரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Golden Globes 2022: 77 வயதில் கோல்டன் குளோப் - சாதனை படைத்த ஸ்குவிட் கேம் நடிகர்!
வாங்குறது 11 ரூபாய்; விக்கிறது 33 ரூபாய் - அரசின் கரும்பு கொள்முதலில் கமிஷன் அடிக்கும் இடைத்தரகர்கள்
கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த அதிமுக ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும், மேலும் வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக நிதியினை காலதாமதமின்றி வட்டாரங்களுக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒருநாள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - Delhi Lockdown: டெல்லியில் தனியார் அலுவலகங்கள் மூடல்; வீட்டில் இருந்து பணி செய்ய உத்தரவு..!
Lata Mangeshkar Hospitalized: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!
இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பணிகள் அனைத்தும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணி புறக்கணிப்பு காரணமாக அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர
ட்விட்டர் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர
யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...