மயிலாடுதுறை தாலுக்கா வரகடை கிராமத்தில் பழவாறு அருகே உள்ள ஆற்றங்கரை தெருவில் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வடிகால் ஆறான பழவாற்றில் பேரிடர் மழை காலங்களில் பல்வேறு பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால் மூலமாக வெளியேறும் நீரானது பழவாற்றில் வடிவது வழக்கம். இதன் காரணமாக தற்போது பழவாற்றில் தற்போது இரண்டு கரைகளையும் தொட்டபடி வெள்ளநீர் கரைபுரண்டு செல்கிறது.
வரகடை பழவாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் இரண்டு பக்கக் கரைகளிலும் தடுப்பு சுவர் இல்லாததால் தாழ்வான பகுதியில் உள்ள ஆற்றங்கரை தெரு குடியிருப்பு பகுதிகளை ஆற்று நீர் கரை வழிந்து தண்ணீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ஆண்டுதோறும் குடியிருப்பு பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும், பலமுறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில், தற்போது பழவாற்றில் முழு கொள்ளலுடன் தண்ணீர் செல்கிறது. மேலும் மழை பெய்தால் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்பை தடுக்க, வரும் காலங்களில் வரகடை பாலம் அருகே இரண்டு பக்க கரைகளிலும் தடுப்பு சுவர் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற