தமிழ் சினிமா ஏராளமான நடிகைகளை கண்டுள்ளது. ஆனால் ஒரு நடிகை அன்று பார்த்தது போலவே இன்றும் அதே தோற்றத்தில் சற்றும் மாற்றமின்றி இரண்டு தசாப்தங்களாக ரசிகர்களை ஆக்கிரமித்துள்ளார் என்றால் அது நடிகை திரிஷாவை தவிர வேறு யாராக இருக்க முடியும். ஆம் திரிஷா சினிமா உலகில் ஒரு ஹீரோயினாக அடியெடுத்து வைத்து இன்றுடன் இருபது ஆண்டுகளை நிறைவு செய்கிறார். 


 



 


கதாபாத்திரங்களாகவே மாறிய திரிஷா :



அடையாளமே தெரியாத ஒரு தோழியாக 'ஜோடி' திரைப்படத்தில் நடித்த திரிஷா ஒரு ஹீரோயினாக முதலில் அறிமுகமானது 'மௌனம் பேசியதே' திரைப்படத்தில். அன்றுதான் தமிழ் சினிமாவில் திரிஷாவின் ராஜ்யம் தொடங்கியது. முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம், விஷால், சிம்பு என அனைவருடனும் அவர் நடித்த த்ரிஷா ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக மாறினார். தொடர்ந்து ஜெஸ்ஸி, அபி, ஜானு தற்போது குந்தவை என மாற்று கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்பிலும் நிரூபித்த அவர் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.


 






 


அன்று போல் இன்றும் :


அறிமுகமான படத்தில் அவர் எந்த அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாரோ அதே போல இன்றும் ரசிகர்களை தன் கைக்குள் அடக்கி வைத்திருப்பது மிக பெரிய சவால். இடையில் ஒரு சரிவு ஏற்பட்ட பிறகும் மீண்டும் ஜானுவாக 96 திரைப்படம் மூலம் மாஸாக ரீ என்ட்ரி கொடுத்தார் த்ரிஷா.


எல்லா நடிகைகளுக்கும் எளிதில் கிடைத்து விடாத ஒரு வாய்ப்பு ஒரு இளவரசியாக நடிக்கும் ஒரு ரோல். அந்த அந்தஸ்தையும் திரிஷாவிற்கு கொடுத்து அவரை குந்தவையாக அழகு பார்த்தார் இயக்குனர் மணிரத்னம். அந்த கதாபத்திரத்தில் திரிஷாவை தவிர வேறு யார் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற மறு யோசனை கூட யாருக்கும் வராத அளவுக்கு பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு குந்தவையாக மனதில் பதிந்து விட்டார் என்கிறார்கள் ரசிகர்கள். 


 






 


திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை :


தமிழ்,கன்னடம்,தெலுங்கு ஆகிய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான ரஜினி,புனித் ராஜ்குமார்,சிரஞ்சீவி ஆகியோருடன் நடித்த ஒரே தமிழ் நடிகை என்கிற பெருமை திரிஷாவையே சாரும். திரைவாழ்க்கை இப்படி சிறப்பாக இருந்தாலும் திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். குறிப்பாக 2015ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயம் பிரமாண்டமாக நடைபெறுவது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து எந்த ஒரு கிசு கிசுவிலும் சிக்காமல் காதல் , கல்யாணத்திற்கும் இடம் கொடுக்காமல் தனது முழு கவனத்தையும் நடிப்பில் மட்டுமே செலுத்தி வருகிறார் திரிஷா. 



திரிஷாவின் ஆசையே வேறு :


சினிமா துறையில் நுழைந்து 20 ஆண்டுகளை கடந்த திரிஷா பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் திரிஷாவிற்கு நடிக்க வேண்டும் என்பதில் ஆசையில்லை. அவரின் வாழ்நாளில் பெரிய கனவாக இருந்தது ஒரு கிரிமினல் சைக்காலஜிஸ்டாக வேண்டும் என்பதே. அதை அடைய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து அதற்காக தன்னை  முழுமையாக தயார்படுத்தி வந்தார். ஆனால் காலம் திரிஷாவை ஒரு நடிகையாக பார்க்க வேண்டும் என்றே ஆசைப்பட்டுள்ளது. 


தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ரசிகர்களை தக்கவைத்துள்ளார் திரிஷா என்பது தான் அவரின் இந்த 20 ஆண்டுகால திரைப்பயணத்தில் செய்து மிக பெரிய சாதனை.