பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில் அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வேகமாக பரவி கொரோனா தொற்று நடிகர், நடிகைகள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது






முன்னதாக, சத்யராஜ், குஷ்பு, விஷ்ணு விஷால், மீனா, த்ரிஷா, அருண் விஜய், மகேஷ் பாபு, தமன், ஷெரின், ப்ரியதர்ஷன் என பல சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 13 ஆயிரத்து 990 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 866 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க: மனிதருக்கு பன்றியின் இருதயம் பொருத்திய மருத்துவர்கள்..! உலகிலேயே முதல் முறையாக சாதனை! அது எப்படி சாத்தியம்?


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண