மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் செந்தில் என்பவரின் சமூக வலைதள பதிவை கண்டித்து துடைப்பத்துடன் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாதர் சங்கத்தினர், பேராசிரியர் சுந்தரவல்லி மற்றும் தந்தை பெரியார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை பற்றி முகநூலில் தரக்குறைவாக பதிவிட்ட மயிலாடுதுறையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வீட்டை துடைப்பத்துடன் சென்று  மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.




நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பாலியல் குற்றச்சாட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார். இவ்விவகாரம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய மாதர் சங்கத்தினர், பேராசிரியர் சுந்தரவல்லி மற்றும் தந்தை பெரியார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறுப்பினர் செந்தில் என்பவர் தரக்குறைவான முறையில் முகநூலில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். 


AR Rahman Concert: ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி.. கேளிக்கை வரி செலுத்தாததால் சென்னை மாநகராட்சி நோட்டீஸ்




இதையடுத்து, அவரது வீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் துடைப்பத்துடன் சென்று முற்றுகையிட்டனர். அப்போது, வீட்டில் இருந்த செந்தில் அந்த கும்பலைக் கண்டதுடன் பின்புறம் சென்று ஒளிந்து கொண்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் இந்த தகவலறிந்து அங்கு சென்ற மயிலாடுதுறை காவல்துறையினர் மாதர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, முகநூலில் தரக்குறைவாக பதிவிட்ட செந்திலை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.


16 Years of Satham Podathey: வித்தியாசமான சைக்கோ த்ரில்லர்... யுவனின் மெல்லிசை... 16வது ஆண்டில் ’சத்தம் போடாதே’




இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து  காவல்துறையினர் செந்திலை மயிலாடுதுறை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூல் பதிவை கண்டித்தும் மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் துடைப்பத்துடன் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் வீட்டை முற்றுகையிட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முரளி பெயரை சொல்லி ரூ.6.10 கோடி ஏமாற்றிய அதர்வா..பரபரப்பு புகார் அளித்த தயாரிப்பாளர்