நடிகர் படம் தயாரிப்பதாகவும், நடிப்பதாகவும் கூறி ரூ.6.10 கோடி வரை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகார் கூறியது திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு மதியழகன் அளித்த புகாரில், ‘செம போதை ஆகாத’ படத்தில் நடிப்பதாக கூறி அதர்வா பண மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.


மதியழகன் அளித்துள்ள புகார் கடித்ததில் “ Etcetera Entertainment என்ற தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் தான், 2018ம் ஆண்டு அதர்வா நடத்தி வரும் Kiickass Entertainment என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘செம போதை ஆகாத’ படத்தை தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டேன். அதன்படி ரூ.5.50 கோடி பட்ஜெட்டில் படத்தை எடுக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சொன்ன தேதியில் பட வெளியாகாமல் காலத்தாமதம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை சரிசெய்யும் நிலை ஏற்பட்டது. 


இதனால் விநியோகஸ்தர்களுக்கு எனது பணத்தை போட்டு செட்டில்மெண்ட் செய்து விட்டேன். இந்த நஷ்டம் தொடர்பாக அதர்வாவிடம் கேட்டால் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் ஏமாற்றும் நோக்கத்தில் செயல்பட்டார். பணமோசடி, நம்பிக்கை மோசடி செய்ததால் அதர்வா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டேன். அதனடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினரான விஷால், நாசர் முன்னிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் அதர்வா சரியான பதில் அளிக்கவில்லை. 


இந்த பிரச்சனையில் தலையிட்ட விஷால் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு அதர்வா ‘மின்னல் வீரன்’ என்ற படத்தை நடித்து கொடுப்பார் என்றும், படத்தின் இயக்குநர், இசை அமைப்பாளர்கள் அதர்வா கூறுபவரை நியமிக்க வேண்டும் என்றனர். மேலும், படத்தில் வரும் லாபம் எனக்கு வரும் என கூறப்பட்டது. ஆனல் மின்னல் வீரன் படத்தில் அதர்வா நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டார். நானும் ரூ. 45 லட்சத்தை அவருக்கு முன்பணமாக கொடுத்தேன். இதர கலைஞர்களுக்கு ரூ.74 லட்சத்தை கொடுத்துள்ளேன். 


இதன் பிறகு படத்தின் தயாரிப்பு குறித்து பேச சென்ற போது அதர்வா அலட்சியப்படுத்தி அனுப்பி விட்டார் தொலைபேசியிலும் சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் எனக்கு மேலும் ரூ.1.19 கோடி நஷ்டம் ஏற்பட்டது. ஏற்கெனவே தயாரிப்பதாக கூறிய படத்தையும் தயாரிக்கவில்லை. நடிப்பதாக கூறிய படத்திலும் நடிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2019ம் ஆண்டு இருமுறை வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எனக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை.  நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தேன். அதையும் அதர்வா மதிக்கவில்லை. அவரால் எனக்கு ரூ.6.10 கோடி இழப்பு ஏற்பட்டது. பணமோசடி, நம்பிக்கை மோசடி என என்னை ஏமாற்றியதால் அதர்வா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்” என கூறியுள்ளார். 


மேலும் படிக்க: Red Card For Actors: நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு - தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்


16 Years of Satham Podathey: வித்தியாசமான சைக்கோ த்ரில்லர்... யுவனின் மெல்லிசை... 16வது ஆண்டில் ’சத்தம் போடாதே’