தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் இன்று மின் நுகர்வோர் குறைத்திய கூட்டம் நடைபெற்றது. சீர்காழி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து தங்கள் குறைகளை முறையீடு செய்தனர்.
இந்த சூழலில் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். குறிப்பாக அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அமர்வதற்கு நாற்காலிகள் ஏதும் ஓடாமலும், ஒவ்வொரு நகர்வராக அலுவலகத்தின் உள்ளே அழைத்து குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்ற நிலையில் பல மணி நேரமாக பலரும் கால் கடுக்க அலுவலகத்தின் வாயிலில் காத்து நின்றிருந்தனர். மேலும், மடிக்கணக்கில் காத்திருந்த பொது மக்களுக்கு குடிதண்ணீர் விட ஏற்படுத்தி தரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.
இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் குறிப்பாக சீர்காழி பயமான கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார வாரியத்தின் சேவை என்பது படுமோசமாக இருந்து வருகிறது. பொதுமக்களின் மிக அவசிய தேவையான மின்சாரம் பலமுறை நிறுத்தப்படுகிறது, வீடுகளில் ஏற்படும் மின் துண்டிப்புகள் குறித்து அலுவலகத்தில் உள்ள புத்தகத்தில் பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு பதிவு செய்தாலும் அதனை சரி செய்ய பணியாளர்கள் உடனடியாக வருவதில்லை. இன்று பதிவு செய்தால் மறுநாளே பெரும் அளவு சரி செய்ய பணியாளர்கள் வருகின்றனர்.
இதனால் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இன்றி பல வீடுகள் இன்னலுக்கு ஆளாகிறது. இது குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டாலும் எவ்வித பயனும் இல்லை. இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உள்ள சூழலில் கண்துடைப்புக்காக இந்த மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவதாகவும், இதனால் எவ்வித பயனும் இல்லை. தமிழக அரசு மக்களுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தாலும், அதிகாரிகள் அரசுக்கு நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முழு குறிக்கோளுடன் செயல்படுகின்றனர் என கருத்து தெரிவித்தனர்.