தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு,வெள்ளம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் பையுடன் இருபது பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகை வழங்கிட உத்தரவிட்டு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை எனவும், 21 பொருட்கள் வழங்காமல் பல இடங்களில் தரப்படும் பொருட்களின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவும் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஊராட்சியில் உள்ள மேலக்கடைதெரு ரேசன் கடையில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் காலதாமதமாக பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Manmadha Leelai: சின்னவீடு படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் மன்மத லீலை - வெங்கட் பிரபு
ரேசன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள், இந்திரா நகர் அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுதொகுப்பை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருவாவடுதுறை ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காமலேயே பெரும்பாலானவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுள்ளதாக குறுஞ்செய்தி வந்ததை கண்டித்தும், பொங்கல் பண்டிகை முடிவடைந்தும் காலதாமதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதை கண்டித்தும், மேலும் காலதாமதமாக வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற முறையில் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
தடையை மீறி ஜல்லிக்கட்டு; தட்டிக்கேட்ட காவலர் மீது கல்வீச்சு - இதுவரை 8 பேர் மீது வழக்குப்பதிவு
பிரதான சாலையில் நடைபெற்ற போராட்டத்தால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல்துறையினர், குத்தாலம் வட்டவழங்கல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தயில் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்குவதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கியதாக குறுஞ்செய்தி வந்தது தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொங்கல் பண்டிகை முடிவடைந்தும் இதுவரை தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்காமல் பொங்கல் தொகுப்பு வழங்கியதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.