வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
நீண்ட வருடங்களாக ஒரு வெற்றிக்கு காத்திருந்த சிம்புவுக்கு இந்தப் படம் அதனை கொடுத்துள்ளது. மாநாடு வெற்றியைத் தொடர்ந்து சிம்புவின் க்ராஃப் ஏற தொடங்கியுள்ளது. பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சிம்புவின் கால்ஷீட் கேட்டு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் பாராட்டி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் செல்வராகவன் என பலர் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபுவின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு எல்லோருக்கும் எழுந்தது. இந்த சூழலில் அவர் தனது உதவியாளர் மணிவண்ணன் எழுதியிருக்கும் கதையை, “மன்மத லீலை” என்ற பெயரில் இயக்குகிறார். இந்தப் படத்தில், அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
வழக்கமாக வெங்கட் பிரபு படங்களுக்கு யுவன் இசையமைக்கும் சூழலில் இந்தப் படத்தில் அவரது சகோதரர் பிரேம் ஜி அமரன் இசையமைக்கிறார். மேலும், வேறு ஒருவர் கதையை வெங்கட் பிரபு இயக்குவது இதுவே முதல்முறையாகும்.
படம் குறித்து வெங்கட் பிரபு பேசுகையில் ,“மன்மத லீலை மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிறகு நிகழும் காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட ஜாலியான படம். இந்தப் படம் 1980-களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு‘ படத்தின் நவீன வடிவமாகவும், பார்வையாளர்களுக்கு புதுவித திரைக்கதை அனுபவத்தை தருவதாகவும் இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வேறு வேறு காலக்கட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்கள்தான் கதை.
ஊரடங்கு நேரத்தில், இந்தக் கதை பற்றி எனது உதவி இயக்குநர் மணிவண்ணனும், நானும் நிறைய பேசினோம். அப்போது மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்தக் கதை இருந்ததால், இதனை ஸ்கிரிப்ட்டாக மாற்றுமாறு அவரிடம் கூறினேன். நகைச்சுவை மட்டுமின்றி, ‘மன்மதலீலை‘ படத்தில், கதாநாயகன் கடைசியில் சிக்குவாரா, சிக்கமாட்டாரா என்ற த்ரில்லரும் நிறைந்து இருக்கும். ‘மாநாடு‘ படத்திற்கான பணிகள் செய்துகொண்டிருந்தபோதே, இந்தப்படத்தை எடுத்து முடித்துவிட்டோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Alanganallur Jallikattu Live: குலுங்கும் அலங்கை.. இது உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு... ABP நாடு நேரலை!