மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை மெயின்ரோட்டில் இரட்டைகுளம் உள்ளது. இந்த குளத்தினை சாக்கியம் பள்ளி கிராமத்தை சேர்ந்த கிராம நாட்டாமை பஞ்சாயத்தால், மயிலாடுதுறை கூறைநாட்டை சேர்ந்த தனி நபர் ஒருவரிடம் மீன்வளர்ப்பதற்கு குத்தகைக்கு விட்டுள்ளனர். 




இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குளத்தில் அதிக அளவில் மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கத் தொடங்கி உள்ளது. ஒன்று இரண்டு மீன்கள் ஒதுக்கிய நிலையில் நேற்றும், இன்றும் ஆயிரக்கணக்கான மீன்கள் குளத்தில் செத்து கரை ஒதுங்கி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் அதிக அளவில் தூர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் கிராம ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். 


Punjab Election 2022: பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ந் தேதிக்கு மாற்றம் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு




பொதுமக்களின் புகாரை தொடர்ந்து திருவிழந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு மற்றும் சாக்கியம்பள்ளி கிராம நாட்டாமை பஞ்சாயத்தால் குளத்தில் இறந்துகிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என மீன் குத்தகை எடுத்தவரிடம் தகவல் கொடுத்தனர். அதனை அடுத்து குளத்தினை குத்தகை எடுத்த நபர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தி வருகிறார்.


Mohammad Amir on Kohli: வரும் தலைமுறையின் உண்மையான தலைவர் கோலி - பாகிஸ்தான் வீரர் நெகிழ்ச்சி ட்வீட்!




மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மர்ம நபர்கள் யாரேனும் குளத்தில் விஷம் வைத்து மீன்கள் கொள்ளப்பட்டிருக்கலாம் என சிலரும், குளத்தில் தண்ணீரின் தன்மை மாறியதால் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம் என சிலரும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குளத்தில் எஞ்சி இருக்கும் மீன்களுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Amazon Great Republic Day Sale 2022: அமேசான் சேலில் கொட்டிக்கிடக்கும் மொபைல்போன்களின் ஆஃபர்கள் !




இந்நிலையில் குளத்தில் மீன்கள் இறந்தது குறித்து காவல்துறையில்  புகார் எதுவும் அளிக்க படாததால் குளத்தில் யாரேனும் விஷம் கலந்தார்களா என விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், பொதுவாக பல இடங்களில் குளத்தில் மீன்களை ஏலம் எடுப்பதும், அல்லது வேறு ஏதேனும் முன்பகை காரணமாக சில குளத்தின் கண்ணீரில்  விஷம் கலந்து மீன்கள் இறப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது எனவும், குளத்தில் இது தொடர்பாக புகார் புகார்கள் வரும் பட்சத்தில் தாங்கள் விசாரணை மேற்கொள்வோம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.