நடிகை பிரகதி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது, திடீரென்று ‘ஊ சொல்றீயா’ பாடலுக்கு டான்ஸ் ஆடினார். 45 வயதில் அவர் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாட்டில் கொலை, கொள்ளை, தற்கொலைகள், பாலியல் வன்கொடுமை போன்ற செய்திகள் தினமும் வருவது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. டிவியை பார்த்தாலும், தினசரி பேப்பரை திறந்தாலும் இந்த செய்திகளே அதிகம் உள்ளன. பொதுமக்களும், எதிர்மறையான செய்திகளை தினமும் படித்து வருவதால் அவர்களுக்குள்ளும் ஒருவித பயமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது. இந்த செய்திகளுக்கு இடையே, தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது. இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
குறிப்பாக பிரபலங்கள் வெளியிடும் வீடியோக்கள் பெருமளவில் வரவேற்பை பெற்று கூடுதல் கவனம் பெறுகின்றன. அவர்கள் செய்யும் வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களை கவரும் வகையில் இருப்பதால் அது வேகமாக பரவி வைரலாகிறது.
அந்த வகையில், பிரகதி ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது, திடீரென்று ‘ஊ சொல்றீயா பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதாவது, இந்தப்பாடலில் தெலுங்கு வெர்ஷனுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அதன் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். 45 வயதில் சமந்தாவுக்கு போட்டியாக அவர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க:
தற்போது அம்மா கேரக்டர்களில் நடித்து வரும் பிரகதி, 90களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர். ‘வீட்ல விசேசங்க’ படத்தில் பாக்யராஜ் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு, பெரிய மருது, பாண்டியனின் ராஜ்யத்தில், சும்மா இருங்க மச்சான், வாழ்க ஜனநாயகம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஜெயம், எத்தன், இனிமே இப்படிதான் உள்ளிட்டங்களில் அம்மா கேரக்டர்களில் நடித்தார். தற்போது, தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் பிரகதி, சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்