மயிலாடுதுறை: பூம்புகார் அருகே துணி கடை திறப்பு விழாவில் 1 ரூபாய்க்கு புது சட்டை வழங்கியதால் கடை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான  இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. தற்போதைய காலகட்டத்தில் எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்ற நிலைமை நிலவுகிறது. மேலும் வாடிக்கையாளர்களும் சலுகை வழங்கும் பொருட்களை வாங்குவதில்தான் ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர்.


Navratra Jeera Cookies: செம டேஸ்டியான நவராத்திரி ஜீரா குக்கீ! ஈசியா எப்படி செய்யுறதுனு பார்க்கலாம்?




அதுவும் அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் போட்டியிட்டு பொருட்களை விற்பனை செய்யவேண்டும் என்றால் அவர்களுக்கு நிகராக சலுகைகளை வழங்க வேண்டும். அதைதான் வாடிக்கையாளர்களும் விரும்புகின்றனர். இந்த வியாபார போட்டி நிறைந்த உலகில் உள்ளுர் வியாபாரி முதல் உலக பெரும் நிறுவனங்கள் வரை இலவசம், விலை குறைப்பு போன்று பல்வேறு யுத்திகளை கையாளுகின்றனர்.  அதன் ஒன்றாக சமீபகாலமாக பல்வேறு இடங்களில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி, ஒரு ரூபாய் புரோட்டா, ஒரு ரூபாய் சட்டை என பல்வேறு பொருட்களை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.


Leo Box Office: பிளடி ஸ்வீட்..! லியோ முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு - 2023ல் இந்திய அளவில் முதலிடம்




ஜவுளிக் கடை, உணவகங்கள், செல்போன் கடை போன்றவைகள் புதியதாக திறக்கப்படும் போது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்படுவது அதிகரித்து வருகிறது. அதுபோன்ற நிகழ்வு மயிலாடுதுறை அருகே நடைபெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே தருமகுளம் கடைவீதியில் கிளாசிக் மென்ஸ்வேர் என்ற புதிய துணி கடையின் திறப்பு விழா இன்று  நடைபெற்றது. பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் ரிப்பன் வெட்டி தொங்கி வைத்தார். அங்கு திறப்பு விழாவை முன்னிட்டும், இன்னும் சில நாட்களில் தீபாவளி வர உள்ள நிலையில் கடையின் விளம்பரத்தை பொதுமக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் முயற்சியாக கடை உரிமையாளர் விக்னேஷ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 1 ரூபாய்க்கு ஒரு சட்டை வழங்குவதாக விளம்பரம் செய்துள்ளார். 


Butter Beans Kurma: சப்பாத்தி பூரி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன் இதுதான்! பட்டர் பீன்ஸ் குருமா செய்வது எப்படி?




அதனை பார்த்த தருமகுளம், பூம்புகார், மேலையூர், வாணகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் உள்ள இளைஞர் பட்டாளம் கடை முன் குவிந்தனர். மேலும் ஒரு ரூபாய் தான்  என்பதால் சட்டை வாங்க பள்ளி செல்லும் மாணவர்களும் கடைக்கு திரண்டுள்ளனர்.  தருமகுளம் கடைவீதியில் வரிசை கட்டி கொண்டு ஒரு ரூபாய் நாணயத்துடன் இளைஞர்கள் தள்ளு முள்ளுடன் நீண்ட வரிசையில் நின்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது போன்ற சலுகைகள் அறிவிக்கும் முன்பு காவல் துறையினரின் முன் அனுமதி பெற்று அவர்களின் பாதுகாப்புடன் செய்தால் ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கலாம் என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.


Karthika Nair Engagement: 'கோ' பட ஹீரோயினுக்கு சீக்கிரம் கல்யாணம்! யார் அந்த வருங்கால கணவர்? ரசிகர்கள் ஆர்வம்