நவராத்திரி என்றாலே ஸ்பெஷல் தான். நவரத்திரியின் 9 நாட்களையும் மக்கள் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். கொலு பொம்மைகள், இனிப்பு கீர், இனிப்பு வகைகள், கார வகைகள் என பல்வேறு வகைகயான உணவு பொருட்கள் நவராத்திரிக்கு ஸ்பெஷலாக தயார் செய்யப்படுகின்றன.


நவராத்திரி:


நவராத்திரிக்கு எலுமிச்சை சாதம், தேங்காய் பால் பாயாசம், வெண் பொங்கல், புளியோதரை, தேங்காய் சாதம், எள் பாயசம், எள் உருண்டை போன்று நன்கு அறிந்த உணவு வகைகளை படைக்கலாம் என்ற நிலையிலும்,  மக்கள் புதிது புதிதாக ஏதேனும் உணவு வகைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இணையத்தை நாடுகின்றனர். 


புதிதாக ஏதேனும் இனிப்பு வகையை முயற்சிக்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்? அப்போ உங்களுக்கானது தான் இந்த ரெசிபி. இந்த நவராத்திரி ஜீரா குக்கீககளை குறைந்த நேரத்தில் எளிமையாக, டேஸ்டியாக செய்து அசத்துங்கள். வாங்க நவராத்திரி ஜீரா குக்கீகளை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


வெண்ணெய் மற்றும் சர்க்கரையை லேசான மற்றும் பஞ்சு போன்ற பதம் வரும் வரை கிரீமாக செய்து, பின்னர் குட்டு மாவு ( kuttu flour ) மற்றும் வறுத்த சீரகம் சேர்த்து நவராத்திரி ஜீரா குக்கீகளை செய்யலாம். இது நவராத்திரி காலத்தில் சிற்றுண்டிக்கு ஏற்றதாக இருக்கும்.


நவராத்திரி ஜீரா குக்கீகளுக்கு தேவையான பொருட்கள்


425 கிராம் வெண்ணெய் (உப்பு சேர்க்காதது), 230 கிராம் சர்க்கரை, 550 கிராம் குட்டு ஆட்டா, 5 கிராம் உப்பு, 5 கிராம் சீரகம்.



நவராத்திரி ஜீரா குக்கீகள் செய்முறை



1.கிரீம் வெண்ணெய் மற்றும் சர்க்கரையை லேசாக மற்றும் பஞ்சுபோன்று வரும் வரை நன்றாக கலக்கவும். குட்டு ஆட்டா மாவை சல்லடை கொண்டு சலித்து விட்டு, உப்பு கலக்கவும்.

 

2. மாவில் லேசாக வறுத்த சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.

 

3. கிரீமிடப்பட்ட வெண்ணெயில் படிப்படியாக மாவு கலக்க வேண்டும். இதை 1-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 60 நிமிடங்கள் அவனில் வைக்க வேண்டும்.

 

4. அடுப்பை 180 டிகிரி சென்டிகிரேடில் முன்கூட்டியே சூடாக்க வேண்டும். குக்கீ கலவையை உருட்டி விரும்பிய வடிவில் வெட்டவும்.

 

5. 180 டிகிரி சென்டிகிரேடில் 15-20 நிமிடங்கள் பேக் செய்யவும். இப்போது சுவையான நவராத்திரி ஜீரா குக்கீகள் தயார். இந்த குக்கீகளுடன் உங்கள் நவராத்திரி பண்டிகையை இன்னும் இனிப்பு மிகுந்ததாக மாற்றுங்கள். 

 

மேலும் படிக்க