தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக அனைத்து டாப்  ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதா. தமிழ் சினிமா மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் ஹீரோயினாகவே நடித்த ராதா தனது தனித்துமான நடிப்பால் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். 


குடும்ப வாழ்க்கை:


ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ராதா மீண்டும் சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கும் நிலையில் மகள்கள் இருவருமே தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள். 


 



கணவர் குழந்தைகளுடன் ராதா


கார்த்திகா நாயர் :


ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர் 2009ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஜோஷ்' என்ற திரைப்படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2011ம் ஆண்டு ஜீவா ஜோடியாக கார்த்திகா நடித்த 'கோ' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். தற்போது தமிழ், கன்னடம், மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


துளசி நாயர் :


ராதாவின் இளைய மகள் துளசி நாயர் 2013ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையாததால் படிப்பில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். 


 



கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் :
 
ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தன்னுடைய வருங்கால கணவருடன் கார்த்திகா நாயர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை தனது    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் கார்த்திகா. அதில் தனது  நிச்சயதார்த்த மோதிரத்தை காண்பித்துள்ளார் கார்த்திகா. மணமகன் யார்? என்ன செய்கிறார் என எந்த ஒரு தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை. விரைவில்  கார்த்திகாவின் திருமண அறிவிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாப்பிள்ளை யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


கார்த்திகாவின் போஸ்டுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். மேலும் திருமண தேதி குறித்த அப்டேட் பற்றி விசாரித்துள்ளனர்.