கொள்ளிடத்தை அடுத்த கோபாலசமுத்திரம் தைக்கால் பகுதியில் தனியரால் அரை நூற்றாண்டை கடந்து ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டிருந்த அரசு இடத்தினை காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் தைக்கால் பகுதியில், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் கடந்து 60 ஆண்டுகளாக தனியாரிடம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக  நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது வந்தது.




இந்நிலையில் நீதிமன்றத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதி மன்ற தீர்ப்பை அடுத்து  நிலத்தை மீட்கும் பணி காவல்துறையினர் உதவியுடன் நடைபெற்றது. அப்போது அரசு தனியாரிடம் இருந்த மீட்கும்  இடத்தை குப்பை கிடங்காக மாற்றிவிட உள்ளதாக தகவல்கள்  வெளியாகின. இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்ட  மீட்கப்பட்ட நிலத்தில் குப்பைகள் கொட்டி இடத்தினை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என  ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு கொள்ளிடம் , புதுப்பட்டினம், சீர்காழி ஆகிய காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டது.


Rahul Gandhi: மகளிர் இடஒதுக்கீடு - சாதி வாரி கணக்கெடுப்பு, ஒபிசி உள் ஒதுக்கீடு கட்டாயம் - ராகுல் காந்தி பேச்சு




இதனை அடுத்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி ஒன்றிய துணைதலைவர் பானுசேகர்,  சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது மீட்கப்பட்ட இடத்தில் குப்பைகள் கொட்டவில்லை என உத்தரவாதம் கொடுத்து எழுத்து பூர்வமாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Atlee Property Value: பாலிவுட்டிலும் தடம் பதித்து சாதித்த அட்லீ... சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்..




மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும்  பொக்லைன் வாகனத்தைக் கொண்டு நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால்  பாதுகாப்பு பணிக்காக சீர்காழி துணை காவல் கண்காணிப்பாளர் லாமேக் தலைமையிலான 100 -க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Stock Market Update: சரிவில் இருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்வு!




கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடத்தினை நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு மீட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், முதற்கட்டமாக 6.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து தற்போது கையகப்படுத்தியுள்ளதாகவும். தொடர்ந்து முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


ODI World Cup Records: உலகக்கோப்பையில் ரன்களை குவித்து தங்க பேட் வென்ற வீரர்கள்..! இந்தியர்கள் ஆதிக்கம்