மங்கைமடத்தில் இயங்கும் அரசு மதுபான கடை சாலையில் முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் அவரது வீட்டிற்கு வந்து செல்லும் போது மது பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறை புலம்புவதாக ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடைசி 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், சீர்காழி ஊராட்சி ஒன்றியம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகிறது. 




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கமல் ஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய திருநகரி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் பேசுகையில், மங்கைமடம் பகுதியில் அதிமுக ஆட்சியின்போது ஒதுக்குப்புறமாக இருந்த அரசு மதுபான கடையை அகற்றிவிட்டு தற்போது மங்கைமடத்தில் சீர்காழி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது.


Stock Market Update: சரிவில் இருந்து மீண்டது இந்திய பங்குச்சந்தை - சென்செக்ஸ் 100 புள்ளிகள் வரை உயர்வு!




இதனால் தினந்தோறும் அதிகப்படியான விபத்துகளும், வாகன நெரிசல்களும் ஏற்படுகிறது, இப்பகுதி வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தமிழக முதல்வர் அவர்களின் துணைவியார் துர்கா ஸ்டாலின் திருவெண்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வரும்போதும் போகும்போதும் கூட மதுபான கடை இருக்கும் சாலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என அரசு அதிகாரிகளே புலம்பும் கேவலமான  நிலையில் அரசு மதுபான கடை இங்கே இயங்கி வருகிறது, எனவே உடனடியாக அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Vanathi Srinivasan: காலில் விழுந்த வானதி சீனிவாசன்.. கடுப்பான பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?




மேலும் மதுபான கடையினால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிப்பதற்காக மின்மோட்டார் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு சம்பவங்களும் அரங்கேரி வருவதாகவும் எனவே இப்பகுதியில் உள்ள மதுபான கடையை உடனே அகற்ற வேண்டும் என  கோரிக்கை வைத்தார்.


IPhone 15 Series: ஐபோன் பிரியர்களே..! இந்தியாவில் தொடங்கியது ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை.. ஏராளமான சலுகைகள் அறிவிப்பு