மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் புருஷோத்தமன் பொறையார் நண்டலாறு சோதனைச் சாவடி அருகில் உள்ள ஆண்டனி ஐஸ் பிளான்ட் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதி அந்த நிறுவனத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். 


COVID-19 Booster Dose: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்.10 முதல் பூஸ்டர் தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு




இந்த சூழலில் அரசு அனுமதி பெறாமல் இயங்கி வரும் அந்த நிறுவனத்தின் மீதும், இதேபோல் தரங்கம்பாடி பகுதியில் அனுமதியின்றி இயங்கிவரும் மற்ற ஐஸ் பினான்டுகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழரசன் பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அளித்துள்ளார். இருந்து இதுநாள் வரை அந்த  ஐஸ் பிளாண்டுகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை அடுத்து அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்களை கோரியுள்ளார்.  அதனை தொடர்ந்து, முறைமன்ற நடுவம் கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி அந்நிறுவனத்தை மூட உத்தரவிட்டது. ஆனால், 3 மாதங்களைக் கடந்தும் அந்நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட தமிழரசன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். 




Madurai IG Asra Garg: கவனத்துக்கு வரும் குற்றங்களை கண்டுகொள்ளாமல் விடும் காவலர்களுக்கு ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை


இந்த நிறுவனத்தில் ஏற்கெனவே சிலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அங்கு, சட்ட விரோதமாக அமோனியம் கலந்து ஆக்சிஜனை பயன்படுத்துவதாகவும், அந்நிறுவனத்தின் மீது இப்போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக தமிழரசன் தெரிவித்துள்ளார்.




Nithya Menon: ஆறு மொழி... அசால்ட் நடிப்பு... சினி துறையில் தனித்துவமான இடத்தை பிடித்த நித்யா மேனன்!


மேலும், இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இது போன்று பல ஐஸ் பினான்டுகளின் உரிய அனுமதி இன்றியும், அரசு விதிமுறைகளை முழுமையாக பின்பற்றாமல் உயிர் சேதங்களை விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதனை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் அந்த நிறுவனங்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர் எனவும், இனிவரும் காலங்களிலாவது பெரும் விபத்துகளும் உயிர்ச் சேதங்களும் ஏற்படுவதற்கு முன்னதாக அரசு அனுமதியின்றி செயல்படும் ஐஸ் பினான்டுகளின் மீதும் உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.