நித்யா மேனன் – திரைவெளியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். சினிமா துறையில் தனித்துவமான கதைத் தேர்வு, எந்த படமாக இருந்தாலும் அதன் கதாப்பாத்திரமாகவே மாறிவிடுவது, திரைப்படங்களில் தனக்குத் தெரிந்த மொழிகளில் நடித்தால், அதற்கு தானே டப்பிங் செய்வது உள்ளிட்ட பல சிறப்பானவைகளுக்குச் சொந்தக்காரர் நித்யா மேனன்.


நித்யா மேனேன், நடிப்பதற்கான இலக்கணத்தை தன் பாணியில் தனித்துவத்துவத்துடன் வகுத்து கொண்டவர். இன்றைய சினிமா உலகில், தன் பிரம்மாண்டமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், தான் நடியாக விரும்பியதில்லை என ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்  என்பது வியப்பளிக்கிறது. ’தான் நடிகையாக விரும்பமில்லை’ என்று சொன்னவர். ஆனால், அவரின் நடிப்பு திறமையை அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் உரக்கப் பேசும். தமிழ் சினிமாவில்  வெப்பம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். ஓ.கே. கண்மணி படத்தில் நவ நாகரிக பெண்ணாக, காதல் கொஞ்சும் மைனாவாக தன் நடிப்பை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் சினிமாவிலேயே, மாலினி 22, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நித்யா மேனனில் கதாப்பாத்திரம் காலம் நின்றும் பேசும் அளவிற்கு அவரின் திறமையால் மிரட்டி இருப்பார்.


கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இவர் நடித்த படங்கள் ஹிட்டானவைகள்.




இப்படி ஊர் மெச்சும் நடிப்பு நித்யாவிற்கு  8-வது வயதிலேயே கிடைத்துவிட்டது. ஆம். நித்யா மேனன் ‘The Monkey Who Knew Too Much’  என்ற ஆங்கில படத்தில் தபுவிற்கு தங்கையாக நடித்து குழந்தை நட்சத்திரமாக தனது கலை வாழ்க்கையை தொடங்கினார். அதற்கு அடுத்து கன்னட படத்தின் மூலம் சினிமா உலகில் கால் பதித்தார். இளம் வயதிலேயே மலையாளர் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார். மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி  என அடுத்தடுக்த்து அவர் சிறப்பான நடிப்பிற்கு பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. சினிமாவின் மூலம் பிரபலம், புகழ் ஆகியவைகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், வித்தியாசமான கதைகள், கதாப்பாத்திரங்கள் என தேடித் தேடி புதுமையான படங்களில் நடித்ததால் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.




இவர்  சினிமாவிற்கு வருவதற்கு முன், இந்தி தொலைக்காட்சி சீரியலில் நடித்திருக்கிறார். சிறு வயது முதலே  நடித்து வந்தாலும், இவர் இதழியல் பயின்றவர். ஆனால், தனக்கு நடிப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால் நடிப்பில் முழுநேரமாக இறங்கினார். தான் ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்திற்கு அர்த்தம் சேர்க்கக் கூடிய நடிப்பை வெளிப்படுத்தும் திறமைசாலி.


தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய ஆறு மொழிகளில் சரளமான பேசக் கூடியவர், இந்த மொழிகளில் தான் நடிக்கும் படத்திற்கு சொந்த குரலில் டப்பிங்கு செய்யும்  சில சினிமா கலைஞர்களில் இவரும் ஒருவர்.


நித்யா மேனன் சிறந்த நடிகை மட்டுமல்ல. சிறந்த பாடகியும்கூட. தெலுங்கில், ஓ. பிரியா, பிரியா, உள்ளிட்ட பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.


இந்திய சினிமா மட்டுமல்லாமல், புகழ்பெற்ற அனிமேஷ்ன் படமான ஃப்ரோசன் படத்தின் தெலுங்கு டப்பிங் செய்தவர் நித்யா மேனன்.


தன் சீர்மிகு நடிப்பால் மக்கள் மனதை கவர்ந்தவர். இன்னும் பல சிறப்பு திரைப்படங்களை தர வாழ்த்துகள்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண