மயிலாடுதுறையில் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து குப்பை சேகரிக்கும் வண்டிகளை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த முறையில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 80 நபர்களை ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் 124 தூய்மை பணியாளர்கள், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் நேற்று புதிதாக பணியமர்த்தப்பட்ட வட மாநில தொழிலாளர்கள் 19 பேர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
No Tomato Dish: தக்காளி விலை ஒரு பிரச்சனையா? தக்காளியே இல்லாத சமையல் ரெசிபீஸ் உங்களுக்காக இதோ..
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தும், நகராட்சி அலுவலகத்தை முற்றகையிட்டும் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக காவல்துறை அளித்த உத்தரவாதத்தின் பேரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆனால் பேச்சு வார்த்தை நடத்தமால் இன்று வடமாநில தொழிலாளர்கள் மூலம் தூய்மை பணியை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம்’ முயற்சித்துள்ளது. இதனை கண்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகர பூங்காவில் குப்பை அல்ல செல்லும் வாகனங்களை சிறைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சியின் நிரந்தர பணியாளர்கள் வேலை செய்தால் வாகனத்தை அனுப்புவோம் எனவும், வட மாநில தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பினால் வாகனத்தை அனுப்ப மாட்டோம் என்று கூறினர்.
Gnanawabi Masjid: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அனுமதி - உயர்நீதிமன்றம் அதிரடி..
தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தமாட்டோம் என்று நகராட்சி துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதியின் பேரில் சிறை பிடித்த வாகனங்களை விடுவித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாததால் நகராட்சியில் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மயிலாடுதுறை நகராட்சி துர்நாற்றம் வீசும் முன் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.