தஞ்சாவூர்: ஆடி 18 என்கிற ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு டெல்டா மாவட்டத்தில் பூக்கள் விலை உச்சத்தை தொட்டுள்ளது.



ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும். ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம். தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது. அந்த வகையில் இன்று ஆடி பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

தஞ்சையில் பூ மார்க்கெட் விலை விபரம்:

மல்லிகை 1 கி - ரூ.500
முல்லை 1 கி - ரூ.500
கனகாம்பரம் 1 கி - ரூ.500
ஜாதி பூ 1 கி - ரூ.500
மஞ்சள் செவ்வந்தி 1 கி - ரூ.250
வெள்ளை செவ்வந்தி 1 கி ரூ. 200
சம்பங்கி 1 கி - ரூ2.40
ரோஸ் 1கி - ரூ1.80
பிச்சிப் பூ 1 கி - ரூ.200
அரளி 1 கி - ரூ.250
மரிக்கொழுந்து 1 கி - ரூ. 60
பன்னீர் ரோஜா 1 கி - ரூ.160 விற்பனையாகிறது.

நேற்றைய விலை


மல்லிகை 1 கி - ரூ.300
முல்லை 1 கி - ரூ.250
கனகாம்பரம் 1 கி - ரூ.300
மஞ்சள் செவ்வந்தி 1 கி - ரூ.140
வெள்ளை செவ்வந்தி 1 கி - ரூ.140
சம்மங்கி 1 கி - ரூ.100
ரோஸ் 1கி - ரூ.100
பிச்சி பூ 1 கி - ரூ.150
அரளி 1 கி - ரூ.180
மரிக்கொழுந்து 1 கி - ரூ.30
பன்னீர் ரோஜா 1 கி - ரூ.100 ரூபாய்க்கு விற்பனை ஆனது

ஆடி 18 முன்னிட்டு 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை பூக்களின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்னும் எகிறும் என்றும் தெரிவித்தனர்.

சில்லறை விற்பனையில் பூக்கள் விலை கூடுதலாகவே விற்பனை செய்கிறோம் என பூ வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.