மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 90 ரயில்வே நிலையங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையம் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தொடக்க விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்ற உள்ளார். 




இந்நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அவரைச் சந்தித்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏமான குத்தாலம் பி.கல்யாணம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் வழியாக தரங்கம்பாடிக்கு ஏற்கெனவே இயங்கி வந்த ரயிலை அதே தடத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என ஏற்கெனவே மனு அளித்துள்ளோம். 


Women Jumped Sea: சுற்றுலா சென்ற தம்பதி: திடீரென கப்பலில் இருந்து குதித்த பெண்மணி - நடுக்கடலில் நடந்தது என்ன? ஷாக் வீடியோ




மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர் மார்க்கமாக புதிய ரயில் பாதை அமைக்க தேவையான நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர்கள் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதுகுறித்து, மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கத் திணறிய ரயில்வே மேலாளர் அவரிடம் இருந்து மீண்டும் மனுக்களை பெற்றுக்கொண்டு, இதுகுறித்து, ரயில்வே போர்டுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச் சென்றார். 


Nitin Chandrakant : அதிர்ச்சியில் திரையுலகம்.. தேசிய விருது வென்ற கலை இயக்குநர் தற்கொலை.. என்ன காரணம்?




மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு அவ்வப்போது வந்து செல்லும் அதிகாரிகளிடம் பொதுமக்களும், ரயில் பயணிகள் சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகள் வைப்பதும், அவற்றை பரிசீலிப்பதாக கூறிச் செல்லும் அதிகாரிகள் அப்படியே கிடப்பில் போடுவதும் வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.