மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் போக்குவரத்து இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகிறது‌.  இவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு பொதுமக்கள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்து வண்ணம் இருந்தது. இதனை அடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பாக அவ்வப்போது கால்நடைகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.




பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள்… அவரை நினைவு கொள்ள வேண்டிய சிந்தனைகள் இங்கே!


இந்நிலையில் இன்று பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த ஏழு மாடுகள் மற்றும் கன்றுகளை  நகராட்சி ஊழியர்கள் பிடித்து வந்து நகராட்சி வளாகத்தில் அடைத்து வைத்தனர். இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர்கள் பெட்ரோல் கேனுடன் வந்து நகராட்சி அலுவலக ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். மேலும், நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் மாடுகள் அடைக்கப்பட்டிருந்த வளாகத்தின் பூட்டை கல்லால் உடைத்து தங்களது மாடுகளை மீட்டு சென்றனர். மேலும் அவர்கள் தெரிவிக்கையில் மாடுகளை அழைத்து வந்து, தண்ணீர், வைக்கோல் போன்று எந்த ஒரு  உணவும் அளிக்காமல் அவற்றை நகராட்சி நிர்வாகம் சித்திரவதை செய்வதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.




Cinema Round-up : வாரிசு இசை வெளியீட்டு விழா முதல் சூர்யாவின் ரசிகர்கள் சந்திப்பு வரை.. இன்றைய சினிமா ரவுண்ட்-அப் இதுதான்!


இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக மாட்டின் உரிமையாளர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் புகுந்து அடைந்து வந்திருந்த கால்நடைகளை பூட்டை உடைத்து அழைத்து சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




சீர்காழி ஈசானிய தெருவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக கட்சியினர் ஏராளமானோர்  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆரின்  35 -ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது, இதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் உள்ள  எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு சீர்காழி நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில்,  ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே சந்திரசேகரன் , ரவிச்சந்திரன் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ். பவுன்ராஜ் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர் பி.வி .பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி,  மற்றும் அதிமுக கழக நகர,ஒன்றிய  பொறுப்பாளர்கள் திரளானோர் கலந்துகொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 




பின்னர் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் படத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ்  மலர் தூவி மரியாதை செய்தார், தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.