மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு துலா உற்சவத்நை முன்னிட்டு கடந்த ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.
Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...நாளை நடை திறப்பு!
மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயத்தில் இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து மீண்டும் அவருடன் இணைந்ததாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் மயிலாடுதுறை என்று ஊர் பெயர் பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு துலா உற்சவம் மாயூரநாதர் கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது.
BHEL Recruitment: பெல் நிறுவனத்தில் வேலை; மாதம் ரூ.1.20 லட்சம் ஊதியம்; விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் ஓட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சுவாமி, அம்பாள் பெரிய தேரிலும், புதிதாக செய்யப்பட்ட இரண்டு சிறிய தேர்களில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. 16-ம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1-ம் தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது. மேலும் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை 16 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
800 OTT Release: முத்தையா முரளிதரனின் ‘பயோபிக்’ .. 800 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!