தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ் பகுதி நேற்று உருவாகி நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரை சராசரியாக 7 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில் இன்று காலை 6 மணி வரை மயிலாடுதுறையில் 56 மில்லி மீட்டர் மழையும், செம்பனார்கோவிலில் 67.2 மில்லி மீட்டர் மழையும், மணல்மேட்டில் 29 மில்லி மீட்டரும், சீர்காழி 58.2 மில்லி மீட்டர், கொள்ளிடத்தில் 49.6 மில்லி மீட்டர், பொறையாரில் 51.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 




இந்நிலையில் நீர் தேங்கிய தாழ்வான பகுதிகளில் பொக்லைன் வாகனம் மூலம் தூர்ந்து போயுள்ள மழை நீர் வடிகால்களை  போர்க்கால அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவுபடி சரி செய்யப்பட்டு தண்ணீர் வடியவைக்கப்பட்டு வருகிறது. இந்த கனமழையால் தரங்கம்பாடி தாலுக்கா காளியப்பநல்லூர், அனந்தமங்கலம், ஒழுகைமங்கலம், எருக்கட்டாஞ்சேரி, கீழ் மாத்தூர், மயிலாடுதுறை அருகே மேல மருதாந்தநல்லூர், கீழ மருந்த நல்லூர், வேப்பங்குளம், சேத்தூர் அகர கீரங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட இரண்டு மாத பயிர்கள் மழை நீரால்  சூழப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை விவசாயிகள் வடியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்




தொடர்ந்து மழை நீடித்தால் பயிர்கள் சேதம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராம மக்கள் 13 -ஆம் தேதி இரவு முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட  பைபர் படகுகள், 300 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணுக்கும் மற்றும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04364-222588, வாட்ஸ் அப் எண் 7092255255 என்ற எண்களை தொடர்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 


வைகை அணையில் இருந்து மேலூர், திருமங்கலம் பகுதி விவசாய தேவைக்காக 1830 கனஅடி வீதம் நீர் திறப்பு





இந்த சூழலில் காலையில் இருந்து மழை பெய்யாமல் இருந்து வந்தது, தற்போது மதியத்திற்கு பிறகு மீண்டும் மழையானது பெய்ய தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபாண்டு சுமார் 1.50 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா தாளடி நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் கடந்த இரண்டு நாட்களாக பெய்த வந்த தொடர்மழையால் நீரில் மூழ்கியுள்ளது. ஏக்கருக்கு 30,000 ரூபாய் வரை செலவு செய்தும் தற்போது பெய்த மழையில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பொதுப்பணித்துறையினர் வாய்க்கால்களை தூர் வாரினால் மட்டுமே இந்த இளம் பயிர்களை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


TN Rain Alert: காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும்; மழை தொடரும்;வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை