மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டதால் அரசு தரப்பில் இன்று அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு  டிசம்பர் 6 ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு வேறு சமுகத்தினர்  இடையே மோதல் ஏற்பட்டது.  அதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்த போது மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். 




தொடர்ந்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பினர் மீதும் மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அடுத்து, கடந்த ஆண்டு அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அரசு தரப்பில் மட்டும் அம்பேத்கர் உருவப்படத்துக்கு பட்டவர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு தினம் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவாய் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. 


Mysuru Dasara Elephant Arjuna: எட்டு முறை அம்பாரியை தூக்கி சுமந்த அர்ஜூனா யானை.. வன அதிகாரிகளை காப்பாற்ற உயிரைவிட்ட சோகம்..!




இந்நிலையில் இன்று அம்பேத்கர் நினைவு தினம் பட்டவர்த்தி கிராமத்தில் வருவாய் துறை சார்பில் அனுசரிக்கப்பட்டது. அரசு தரப்பில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் வருவாய் துறையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரு தரப்பினரையும் சேர்ந்த 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. 


Happy Birthday Cricketers: 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிறந்தநாள் இன்று.. யார் அவர்கள்..? சாதனைகள் என்னென்ன?




ஆனால் இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் மட்டுமே கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்த சூழலில் இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் தலைமையில் 220 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனம், தீயணைப்பு துறை வாகனங்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


PKL Season 10: புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழ் தலைவாஸ்...முதல் இடத்தில் யார் தெரியுமா? விவரம் இதோ!