ப்ரோ கபடி 10 வது சீசன்:
ப்ரோ கபடி லீக்கின் இதுவரை 9 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 10 வது சீசன் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் பிரமாண்டமாக தொடங்கிய இந்த லீக் தொடர் பிப்ரவரி 21 ஆம் தேதி முடிவடையும். கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ப்ரோ கபடி லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெய்பூர் பிங்பந்தேர்ஸ் அணி உட்பட மொத்தம் 12 அணிகளில் விளையாடுகின்றன.
அதன்படி,குஜராத் ஜெயண்ட்ஸ், யு மும்பா, தமிழ் தலைவாஸ், புனேரி பல்டன், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு Bulls, UP யோத்தாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன், ஸ்பாட்னா பைரேட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி கே.சி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல், தமிழ் தலைவாஸ் அணி 1 போட்டியில் விளையாடி அந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முன்னதாக, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இதில், 39-37 என்ற கணக்கில் யு.மும்பா அணியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ் அணி.
புள்ளிப்பட்டியல்:
இடம் | அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | டை | பாய்ண்ட்ஸ் |
---|---|---|---|---|---|---|
1 | குஜராத் ஜெயண்ட்ஸ் | 3 | 3 | 0 | 0 | 15 |
2 | யு மும்பா | 2 | 1 | 1 | 0 | 6 |
3 | தமிழ் தலைவாஸ் | 1 | 1 | 0 | 0 | 5 |
4 | புனேரி பல்டன் | 1 | 1 | 0 | 0 | 5 |
5 | பெங்கால் வாரியர்ஸ் | 1 | 1 | 0 | 0 | 5 |
6 | பெங்களூரு Bulls | 2 | 0 | 2 | 0 | 2 |
7 | UP யோத்தாஸ் | 1 | 0 | 1 | 0 | 1 |
8 | ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் | 1 | 0 | 1 | 0 | 1 |
9 | தெலுங்கு டைட்டன்ஸ் | 1 | 0 | 1 | 0 | 1 |
10 | பாட்னா பைரேட்ஸ் | 0 | 0 | 0 | 0 | 0 |
11 | ஹரியானா ஸ்டீலர்ஸ் | 0 | 0 | 0 | 0 | 0 |
12 | தபாங் டெல்லி கே.சி | 1 | 0 | 1 | 0 | 0 |
இந்நிலையில், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் UP யோத்தாஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய அணிகளும் மோதுகின்றன.