நாடுமுழுவதும் வருகின்ற ஆகஸ்ட் - 15 -ம் தேதி 76 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து நாடுமுழுவதும் முன்னதாகவே பல்வேறு நிகழ்வுகள் சுதந்திர தின தொடர்பான நடைபெற்ற வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 76- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு "குப்பை இல்லா குத்தாலம்" என்ற மாபெரும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.




குத்தாலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய ஓட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். 


Modi Twitter DP: 'எல்லாரும் உங்க டிபி-யில தேசிய கொடி போட்டோ வைங்க..' இந்தியாவுக்கே கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி..!




அதனை தொடர்ந்து  மினி மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழை வழங்கினர். சிறுவர் மாணவர்-மாணவியர் மற்றும் பொது என நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், பேரூராட்சி தலைவர் சங்கீதா மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


EPS: "ஜெயலலிதா மீதான தாக்குதல்.. நானும் சட்டசபையிலதான் இருந்தேன்.." எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி..!