ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது உண்மை என்றும் 1989-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரையில் நான் இருந்தேன் என்று அ.தி.மு.க. பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


மதுரை வலையங்குளத்தில் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற இருப்பதை தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநட்டிற்கான பணிகளை ஆய்வு செய்தார். 


மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “ 1989-ல் சட்டப்பேரவையில் நானும் இருந்தேன். எதிர்க்கட்சி தலைவர், பெண் என்று பாராமால் அவரது சேலையையும் முடியையும் பிடித்து இழுத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி முன்னிலையிலே ஜெயலலிதா தாக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு நடந்த அவமரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி கூறுகிறார். பொய்யான தகவலை தரும் முதலமைச்சருக்கு வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்று தருவார்கள்.” என்று தெரிவித்தார். 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரம்


நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், திமுக, காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக சாடி பேசினார். "மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதில், அரசியல் செய்ய வேண்டாம்" என்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா சேலை கிழிப்பு சம்பவத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த ஒரு சம்பவத்தை இந்த சபைக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்போது, முதலமைச்சராகாத ஜெயலலிதாவின் புடவை தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் பிடித்து இழுக்கப்பட்டது. அவர், அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். என்று பேசியிருந்தார். நீட், காவிரி விவகாரங்களில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. 


எதிர்க்கட்சி கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,” இந்தியா என்கிற பெயர் மக்களுக்கானது. கூட்டணிக்கு பெயராக அதை வைத்து விட்டார்கள் அதுவே தவறு. பெங்களூர் மாநாட்டில் எங்கள் ஆதரவு வேண்டுமென்றால் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் காவிரி விவகாரத்தில்  கெஜ்ரிவாலை போல உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எங்களுக்கான பங்கை காவிரியில் திறந்து விட்டால் இந்த கூட்டத்தில் இடம் பெறுவேன் என்று முதலமைச்சர் அறிவிப்பு கொடுத்திருந்தால் இந்நேரம் தண்ணி வந்து சேர்ந்திருக்கும். பெங்களூரில் நீர்வளத் துறை அமைச்சரை முதலமைச்சரை சந்தித்தார் அப்போதாவது இது சம்பந்தமாக பேசி இருக்கலாம்.நாங்குநேரி விவகாரம் குறித்த கேள்விக்கு,” ஜாதி சண்டை மத சண்டை எல்லாம் திமுக ஆட்சியில்தான் பார்க்க முடியும் அதுதான் தொடர்ந்து வருகிறது.” என்று தெரிவித்திருந்தார்.