மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் நேற்று பிறந்த 14 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் கொண்டாடினர்.


நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் 69வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து அவருக்குப் பல்வேறு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன். 


50,000 பேருக்கு 4 கழிவறைகள்.. 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் விநியோகம்.. காசா முகாம்களின் அவல நிலை




குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சாதனைகளை படைத்து வரும், கமல்ஹாசனின் சாதனையை இனி எவராலும் முறியடிக்க முடியுமா? என்ற கேள்வியுடனே தொடர்கிறது கமல்ஹாசனின் திரைபயணம். இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு” எனத் தெரிவித்துள்ளார். இதேபோன்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், தமிழ்த் திரையுலகின் சாதனைச் சிகரமான கமல்ஹாசன் அவரது 69 -ஆம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் தமிழக மக்களுக்கு அவர் நீண்ட காலம் பணியாற்ற எனது வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.


Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்?




அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், கலைஞானி என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை” எனப் பதிவிட்டுள்ளார். 


Diwali Bonus 2023: நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்‌: அரசு அறிவிப்பு




இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் நேற்று கோயில்களில் வழிபாடு நடத்தியும், மரக்கன்றுகள் நட்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து இன்று மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் நேற்று பிறந்த பச்சிளம் குழந்தைகள் 14 பேருக்கு கமல்ஹாசன் நற்பணி இயக்க மண்டல அமைப்பாளர் ரிபாயுதீன் தலைமையில் அவ்வியக்கத்தினர் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தனர். இதில் மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் ராஜசேகர் மற்றும் கமலஹாசன் நற்பணி இயக்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்?