தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்‌ வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. 


தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக கூட்டுறவு சங்க பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். இதன்படி,  44,270 பணியாளர்களுக்கு போனஸ் வழங்க ரூ. 28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


அந்த வகையில் தற்போது தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்‌ வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, "சி" மற்றும்‌ "டி" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ்‌ 8.33% மற்றும்‌ கருணைத்‌ தொகை 20% 2023-224-இல்‌ வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். 


மேலும் படிக்க: சரஸ்வதி மகால் நூலகத்துக்கு நிரந்தர இயக்குநர் நியமிப்பது குறித்து பரிந்துரைக்கப்படும்: சட்டமன்ற நூலகக்குழு தலைவர் தகவல்


போனஸ்‌ சட்டத்தின்‌ கீழ்வரும்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகத்தில்‌ பணிபுரியும்‌ பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில்‌ 20% சதவீதம்‌ (போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத்‌ தொகையாக வழங்கவும்‌ ஆணையிடப்பட்டுள்ளது.






இதன்படி, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து மண்டலங்கள்‌, நவீன அரிசி ஆலைகள்‌, கிடங்குகள்‌, நேரடி நெல் கொள்முதல்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ திறந்தவெளி சேமிப்பு மையங்கள்‌ ஆகியவற்றில்‌ பணிபுரியும்‌ சுமார்‌ 49,023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ்‌ மற்றும்‌ கருணைத்‌ தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை அரசு கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த வாரம் அரசு பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என்றும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


இதையும் வாசிக்கலாம்: Schools Holiday: பள்ளிகளுக்கு நவ.9 முதல் 11 நாட்கள் விடுமுறை: டெல்லி அரசு அறிவிப்பு- என்ன காரணம்? 1