மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 மீனவ கிராமங்கள் உள்ளன. தரங்கம்பாடி தாலுக்கா குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் ஏராளமான மீனவர் குடும்பங்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்கால் இந்திய கடலோர காவல் படை மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பாக மீனவர்கள் கடலில் பாதுகாப்பாக பயணம் செய்வது, விபத்தில் சிக்கி கொண்டால் பாதுகாப்பாக கரை திரும்புவது குறித்து மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 




இந்திய கடலோர காவல் படை அதிகாரி ஆர் வி சிங், கடலோர காவல் படை ஓய்வு பெற்ற ஆய்வாளர் காவல் கதிரேசன் ஆகியோர் கடலில் ஆபத்து ஏற்படும்போது கடலோர காவல் படை உதவி கோருவது, இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க வேண்டும், உதவிஎண் 1554தொடர்பு கொள்வது, லைஃப் ஜாக்கெட், லைஃப்பாய்(மிதவை) ஆகிய உயிர்காக்கும் கருவிகளை படகுகளில் வைத்திருக்க வேண்டும், விபத்து ஏற்பட்டால் அதனை பயன்படுத்தி எவ்வாறு தப்பித்து உதவி கோறுவது என்பதனை செயலமுறை விளக்கத்துடன் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர். 


‘2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கி.மீ., பயணிக்கலாம்’...சேலம் மாணவர் உருவாக்கிய பேட்டரி வாகனம் - பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு




கடலோர காவல் படை மருத்துவர் ராகுல் தீக்காயம் மாரடைப்பு ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி சிகிச்சை பெறுவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். மேலும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் இருந்து வானிலை,  கடல் காற்றின் வேகம், அலையின் உயரம், மீன் கிடைக்கும் இடம், புயல் முன்னெச்சரிக்கை, மழை, ஆகிய தகவல்களை பெற்று ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்களுக்கு தினந்தோறும் வழங்கி வருவதாகவும், மீனவர்கள் அதனை பயன்படுத்தி கடலில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள அதன் திட்ட மேலாளர் மெய் கண்டன் அறிவுறுத்தினார். இந்த முகாமில் குட்டியாண்டியூர் மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Karnataka Election Result: ’வெறித்தனம் வெறித்தனம்’ - செம குத்தாட்டம் போடும் கர்நாடக காங்கிரஸ் குயின் - வைரல் வீடியோ




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண