மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் பிரபல சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் சைவ உணவகம் என்றாலே காளியாகுடி ஹோட்டல் என்ற பெயர் வெகு பிரபலம். இந்த ஹோட்டலில் சங்கரன்பந்தலை சேர்ந்த 36 வயதான வழக்கறிஞர் பூபாலன் மற்றும் 58 வயதான கலியமூர்த்தி ஆகிய இருவரும் நேற்று மாலை ஹோட்டலுக்கு சென்று சோளா பூரி  ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். அப்போது பூபாலன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பூரி சென்னா மசாலாவில் கரப்பான்பூச்சி ஒன்று வெந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹோட்டல் ஊழியர்கள் எந்த வருத்தமும் தெரிவிக்காமல், அலட்சியமாக இருந்துள்ளனர்.




இச்சம்பவம் தொடர்பாக உணவருந்திய இருவரும் வாக்குவாதம் செய்த போது நாங்கள் ஊழியர்கள் தான். எங்களால் என்ன செய்ய முடியும் என்று அலட்சியமாக தெரிவித்துள்ளனர். இருவரும் இரண்டு செட் சோளாபூரி சாப்பிட்ட உணவிற்கு 180 ரூபாய் பணம் செலுத்தி பில்லை பெற்று கொண்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.  இருவருக்கும் இசிஜி உள்ளிட்ட உடனடி பரிசோதனைகள் செய்யப்பட்டு இரண்டு மணி நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மருத்துவர்கள் அவர்களை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். உணவில் கரப்பான் பூச்சி வெந்து கிடந்தது தொடர்பாக  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்துள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை மூலம் ஹோட்டலில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


Chennai Parandur Airport: 290வது நாளை கடந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் - தீர்வு என்ன..?




மயிலாடுதுறையில் உள்ள பிரபல உணவகங்கள் வெளித்தோற்றத்தில் பிரம்மாண்டமாக உள்ளதாகவும். ஆனால், உணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும் இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்புத் துறையினர் நகராட்சி சுகாதாரத்துறையினர் பெயரளவிற்கு மட்டும் நடவடிக்கை எடுப்பதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து மயிலாடுதுறை பகுதிகளில் அரங்கேறி வருவதாகவும், உணவு பாதுகாப்புத் துறையினர் கடைகளில் விற்கும் பொருள்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யாததால்  மயிலாடுதுறையில் உள்ள பழக்கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஈழவளவன் வேண்டுகோள் விடுத்தார்.


Karnataka Election 2023: கர்நாடக தேர்தல்.. முன்னிலையால் களைகட்டும் காங். அலுவலகம்.. காலியான பாஜக கூடாரம்