மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக் கூட்டம் சீர்காழி நகராட்சி நகர்மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சீர்காழி நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஆணையா் ராஜகோபால் ( பொறுப்பு)   மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். 


வாங்காத ரூ.8.50 லட்சம் கடனை கட்டச் சொல்லி அமைச்சருக்கு தொந்தரவு - சென்னையில் 4 பேர் கைது




அப்போது சீர்காழி நகராட்சி உட்பட்ட உட்பகுதிகள் குறித்த பிரச்சனைகளை வார்டு கவுன்சிலர்கள் நகர மன்ற தலைவரிடம் தெரிவித்து அதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். மேலும் பல வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி சார்பில் செய்யப்பட வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சீர்காழி நகராட்சி சார்பில் செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை தெரிவித்தனர்.


Baakiyalakshmi Serial: ”நீதான் என்னோட வாழ்க்கை ராதிகா” - பாக்யாவிடமே தப்பா சத்தியம் செய்த கோபி... இன்னைக்கு இருக்கு கச்சேரி..!




அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய தேமுதிகவை சேர்ந்த வார்டு கவுன்சிலர் ராஜசேகர் நகராட்சியில் மண்வெட்டி வாங்குவதற்காக 10 லட்சம் ரூபாய் டெண்டர் விட்டதாகவும், ஆனால் மண்வெட்டி கம்பு கூட, வாங்கவில்லை. அதேபோன்று டெங்கு பரவலை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிப்பதற்கும் பல லட்சம் ரூபாயில் ஒதுக்கீடு செய்யப்பட்டது  என்றும், ஆனால் இதுநாள் வரை ஒரு வாரத்திற்கு கூட கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறவில்லை,  மேலும் குடிநீர் வழங்கும் நீர்நிலை தொட்டிகள் சுத்தம் செய்வதில்லை என்றும் கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களிடம் பதில் கிடையாது என்றார். 




மேலும், தூய்மை பணியாளர்களுக்கு  மண்வெட்டி, அருவாள், கையுறை உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் வாங்கி தர வேண்டும் என்றும், நகராட்சியில் பணம் இல்லை என்றால் தேமுதிக சார்பில் தான் பிச்சை எடுத்து பணம் தருவதாக கூறினார். மேலும் ஆக்கபூர்வமான அடிப்படை பிரச்சனைகளை கவனம் செலுத்தாமல் மழை பெய்யும் சூழலில் குளங்களை தோண்டுவது சரியான செயல் அல்ல என்றார். மேலும் நகராட்சி நிர்வாக சீர்கேடுகள்  குறித்தும், அதிகாரிகள் குறித்தும் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிய நிலையில், அதற்கு உரிய பதில் இன்றி திணறிய அதிகாரிகள் அதனை செய்தியாக பதிவு செய்த செய்தியாளரை அதிகாரிகளின் தில்லுமுல்லுகள் வெளியில் தெரிந்து விடும் என்ற நோக்கில், செய்தியாளர்கள் செய்தி எடுக்க அனுமதி இல்லை என கூறி அதிகாரிகள் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண