ஆந்திர வேளாண்துறை அமைச்சரிடம் வாங்காத கடனை கட்டச் சொல்லி வற்புறுத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் லோன் ஆப் மூலம் ரூ.8.50 லட்சம் கடன் பெற்றுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் அசோக்கின் மொபைல் போனின் தொடர்பு பட்டியலில் உள்ள நபர்களை சென்னையைச் சேர்ந்த கடன் வசூலிக்கும் நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. அந்த வகையில் அசோக்கின் தொடர்பு பட்டியலில் இருந்த ஆந்திர வேளாண்துறை அமைச்சர் கக்கனி கோவர்தன் ரெட்டியின் எண் என தெரியாமல் அழைத்துள்ளனர்.
மதுரை : புகார் கொடுக்க வந்தபோது பழக்கம்.. பெண்ணுக்கு பாலியல்தொல்லை.. இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
அமைச்சரின் தனி உதவியாளர் சங்கரய்யா அந்த அழைப்பை எடுத்து பேசியுள்ளதோடு சம்பந்தப்படுத்தப்பட்ட நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கடன் வசூலிக்கும் முகவர்கள் மீண்டும் அமைச்சரின் நம்பரை தொடர்புக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்துமாறு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த சங்கரய்யா முதுகூர் போலீசில் புகார் செய்தார்.
Crime: ரயிலுக்காக காத்திருந்தபோது பாலியல் அத்துமீறல்! ஸ்டேஷன் மாஸ்டர்கள் மீது பத்திரிகையாளர் புகார்!
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சி.விஜய ராவ் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். இதனடிப்படையில் சென்னை திருமங்கலம் அருகேயுள்ள கால் மேன் சர்வீஸ் என்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து சென்னை வந்த போலீசார் கடன் வசூல் முகவர்கள் 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், 4 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வாங்காத கடனை கட்டச் சொல்லி அமைச்சருக்கு போன் செய்து தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாமே ரூ.2000 நோட்டு.. பணம் வைக்கவே தனி ரூம்.. அர்பிதா முகர்ஜி ரூ50 கோடியை பதுக்கியது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்