மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வுப் பணியின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பணிகளை சர்வர செய்ய வேண்டும் என அதிகாரிகளை  கடிந்து கொண்டார். 


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் கருவாழகரை காமாட்சி அம்மன் கோயிலில், சீர்காழி சட்டநாதர் கோயில், திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், கீழ பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆய்வு மற்றும் தரிசனம் செய்தார். இதற்காக நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். 




Srilanka Crisis: ‛இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை’ கை விரித்தது உலக வங்கி!


முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழகரை கிராமத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் தரிசனம் மேற்கொண்டார். பின்னர், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் சொத்துக்கள் உள்ளிட்ட விபரங்களை கோயில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சீர்காழி சட்டநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்து கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான  சுவேதாரண்யேஸ்வரர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 




அப்போது பள்ளி கட்டட சீரமைப்பு பணிகள் காலதாமதமாகவும், சரிவர செய்யப்படாத கண்டு கோபமடைந்த அமைச்சர் அதிகாரிகளை சாடினார். ஆதரவாக பேசிய திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகனிடமும் அவர்களுக்கு சப்போர்ட் செய்யாதீர்கள் என கூறினார். தொடர்ந்து தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டின் அருகே முன்பு இருந்த பள்ளி கழிவறை குறித்து அமைச்சர் கேட்டதற்கு, வீட்டின் அருகில் பள்ளியின் கழிவறை இருந்ததால், அவற்றை அங்கிருந்து இடித்து அகற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.


Anna University Graduation: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ம் பட்டமளிப்பு விழா: 70 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் பங்கேற்பு!




தொடர்ந்து கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோயில்களில் தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டவர் திருவாரூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். அமைச்சருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் லலிதா, திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா. முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். கட்டிட பணிகள் சரிவர செய்யப்படாதது குறித்து அதிகாரிகளை அமைச்சர் கடுமையாக சாடிய நிகழ்வு பரபரப்பை ஏற்ப்படுத்தியது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண