மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதாகவும், ஆகையால் உடனடியாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அனைத்து துறை மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களை மாநகராட்சி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதை கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் இன்று மருத்துவர்கள் ஒரு மணி நேரம் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Five State Elections: மக்களவை தேர்தலுக்கான செமி பைனல்.. ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்




இதே போல் மயிலாடுதுறை அரசினர் பெரியார்  தலைமை மருத்துவமனையிலும் மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த போராட்டத்தில் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையின் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. இம்மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 20 பிரசவம் என மாதத்திற்கு சுமார் 600 -க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவமனையில் 8 மகப்பேறு மருத்துவர்கள் பணியில் இருந்த நிலையில் பலர் பணி மாற்றத்திலும், விடுப்பிலும் சென்று விட்ட காரணத்தால் தற்போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 


Bigg Boss 7 Tamil: 'கேம் ஆட தெரியல.. நீ மொத கெளம்பு..' பிரதீப் ஆண்டனியிடம் சீறிய விஷ்ணு - பிக்பாஸ் ப்ரமோவில் இன்று





இதனால் ஏற்படும் பணிச்சுமை காரணமாக மருத்துவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் உடனடியாக மருத்துவமனையில் கூடுதல் மகப்பேறு மருத்துவர் நியமிக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்ட அனைத்து துறை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் பிரபா தலைமையில் கருப்பு பேட்ச் அணிந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Bigg Boss 7 Tamil: 'கடும் மன உளைச்சல்' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் பவா செல்லதுரை - ரசிகர்கள் அதிர்ச்சி