பிக் பாஸ் சீசன் 7 தமிழ் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி  நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகிறது.


நடப்பு  சீசனில் மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன், நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய் ,  பிரதீப் ஆண்டனி, விசித்ராம் என பலரும் பங்கேற்றுள்ளனர்.  இந்த முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனன்யா வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து எழுத்தாளர் பவா செல்லத்துரை தன் விருப்பத்தின் பேரில்  வெளியேறினார். இந்நிலையில் இன்றைய நாளுக்காக பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.


 அனைவரிடமும் சீறும் விஷ்ணு விஜய்


இன்று பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 8 ஆவது நாளுக்கான முதல்  ப்ரோமோவில் தொலைக்காட்சி நடிகர் விஷ்ணு பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே நோ யுவர் ஹவுஸ் மேட்ஸ் டாஸ்க்கில் மாயா கிருஷணன் மற்றும் பிரதீப் ஆண்டனியுடன் கடுமையாக நடந்துகொண்டார் விஷ்ணு. இதனைத் தொடர்ந்து இன்றைய ப்ரோமோவில் .விஷ்ணு பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரமிடம் ஆத்திரமாக பேசுகிறார். இதனைத் தொடர்ந்து சரவண விக்ரமிடம் ”இந்த வீட்டில் நீங்கள் கேப்டனா இல்லை எல்லாரும் கேப்டனா. அப்போ கேப்டனாக இருப்பதற்கான ஆளுமை உங்ககிட்ட இல்ல.”  என்று கூறுகிறார்.


பிரதீப் ஆண்டனியுடன் மோதல்






அப்போது அங்கு இருக்கும் பிரதீப் ஆண்டனி  அதை எல்லாம் நீங்க சொல்லக் கூடாது என்று சொல்லும்போது, பிரதீப் பக்கம் திரும்பும் விஷ்ணு ”அப்டி எல்லம் பண்ண முடியாது. இங்க டீம் தான் பேசனும் டீமா பேசனும்’ என்று சொல்கிறார். இதற்கு பிரதீப்  “ உன் டீமே இல்ல நான்” என்று சொல்லவும் ஆவேசமடையும் விஷ்ணு “ அப்டினா நீ கெளம்பு..உனக்கு கேம் ஆட தெரியல “ என்று சொல்ல செம கடுப்பாகிறார் பிரதீப் ஆண்டனி.